கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள எலச்சி பாளையத்தில் பால சண்முகம் என்பவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலையில் பண்ணையை மூடி விட்டு வீட்டுக்கு சென்று விட்டு காலையில் வந்து பார்த்தார். அப்போது தெருநாய்கள் பண்ணைக்குள் புகுந்து அங்கிருந்த 40க்கு மேற்பட்ட கோழிகளை கடித்துகுதறி கொன்றது.மேலும் 10 க்கு மேற்பட்ட கோழிகள் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெரு நாய்கள் கடித்து 40 கோழிகள் பலி..
