கோவை பொள்ளாச்சி – ரோட்டில் உள்ள மலுமிச்சம்பட்டி சந்திப்பில் நேற்று ஒரு கார் ரோட்டில் உள்ள தடுப்புச் சுவரில் மோதியது. இதில் காரில் இருந்த சென்னை அடையாறு, ஜீவரத்தினம் நகரை சேர்ந்த ஸ்ரீதர் (வயது 51)மனைவி அன்னபூரணி (வயது 47) மகள்கள் ஸ்ரீ ரிஸ்சது (வயது 13) ஸ்ரீ சமன் விதா (வயது 10) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.இவர்கள் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து செட்டிபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கார் ஓட்டி வந்த போத்தனூர் அன்னை சத்யா நகரை சேர்ந்த மனோஜ் குமார் ( வயது 33 )மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
தடுப்புச் சுவரில் கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயம்..
