கோவை மாவட்ட காவல்துறையினர்…
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் நேற்று காருண்யா நகர் காவல் நிலைய காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சிறுவாணி சாலையில் சோதனையில் ஈடுபட்டு இருந்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் மகன் ஐயப்பன் (வயது 29) திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் ராஜா ( வயது 32) மற்றும் தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த லிங்கம் மகன் ரமேஷ் (வயது 44)ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 350 கிலோ புகையிலை பொருட்கள், இருசக்கர வாகனம்-1மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடத்தலுக்கு பயன்படுத்திய நான்கு சக்கர வாகனம்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 3 பேரும்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..
காருண்யாவில் 350 கிலோ புகையிலை பறிமுதல் – 3 பேர் கைது..!
