கோவை மில் அதிபர் வீட்டில் ரூ.30 லட்சம் தங்க,வைர நகைகள் திருட்டு – வேலைக்கார பெண் மீது புகார்..!

கோவை ரேஸ்கோர்ஸ்சில் வசிப்பவர் வெங்கடபதி ( வயது 74 ) மில் அதிபர். இவரது வீட்டில் பீரோவில் இருந்த சுமார் ரூ. 30 லட்சம் மதிப்புள்ள தங்க – வைர நகைகள் திடீரென்று காணாமல் போனது..இதுகுறித்து வெங்கடபதி ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரில் தனது வீட்டில் வேலை செய்து வந்த ரத்தினபுரி பெரியசாமி லே-அவுட்டை சேர்ந்த வசந்தராஜ் மனைவி விஜயலட்சுமி (வயது 36 ) என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் கிருஷ்ணலீலா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.