கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 7 வயது சிறுமி. இவர் விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த பகுதியை சேர்ந்த குப்புராஜ் ( வயது 58) என்பவர் அந்த சிறுமியிடம் பேச்சுக் கொடுத்து அழைத்துச் சென்றார். பின்னர் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது பற்றி அந்த சிறுமி அழுது கொண்டே சென்று தனது பெற்றோர்களுடன் கூறியுள்ளார் .அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பொள்ளாச்சி மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள் .அதில் அந்த சிறுமிக்கு பாலில் தொல்லை கொடுத்தது குப்புராஜ் என்பது தெரியவந்தது. இதை யடுத்து போக் சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குப்புராஜை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குணசேகரன் குற்றம் சாட்டப்பட்ட குப்புராஜிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதை யடுத்து போலீசார் குப்புராஜை பாதுகாப்புடன அழைத்துச் சென்றுகோவை மத்திய சிறையில் அடைத்தனர்..
7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 3 ஆண்டு ஜெயில் – கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு..!
