கோவை பீளமேடு அருகே உள்ள நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் அஜய் (வயது 36) பா.ஜ.க கோவை மண்டல துணைத் தலைவராக உள்ளார்.இவரது மனைவி பிரியா. இவர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்து சில மாதங்களாக தனது மனைவி பிரியாவை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். அத்துடன் அஜய் அந்த பகுதியில் உள்ள பெட்டிக்கடை மளிகை கடைகளில் புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் (குட்கா) விற்பனை செய்வதை அடிக்கடி போலீசுக்கு தகவல் தெரிவித்து வந்தாராம். இதனால் அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் ( வயது 25) என்பவருக்கும் அஜய் க்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் முருகேசனின் கடையில் வேலை செய்து வரும் நாகராஜன் மற்றும் அவருடைய நண்பராகிய 2 பேர் அந்த வழியாக நடந்து சென்ற அஜய்யை வழிமறித்தனர். பின்னர் அவரிடம் ஏன் பொய்யான தகவலை போலீசுக்கு தெரிவித்து வருகிறாய் ?என்று கேட்டனர் இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நாகராஜ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அஜய்யை வெட்டினார். அதை அவர் தடுத்ததால் கையில் பலத்த வெட்டு விழுந்தது. உடனே நாகராஜ் தனது நண்பருடன் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று படுகாயம் அடைந்த அஜய்யை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். .இது குறித்து பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் வழக்கு பதிவு செய்து அஜய்யை அரிவாளால் வெட்டியதாக நாகராஜ் ,அஸ்வின் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்ததாக அனிதா ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தார். இவர்கள் 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முருகேசன் மற்றும் அஜய்யின் மனைவி பிரியா ஆகியோர் போலீசார் தேடி வருகிறார்கள்..
பாஜக நிர்வாகியை அரிவாளால் வெட்டிய வழக்கில் பெண் உள்பட 3 பேர் கைது..!






