90 போதை மாத்திரைகளுடன் 3 பேர் கைது.

கோவை மே 17 கோவை செல்வபுரம் காவல் நிலைய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு, சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் நேற்று செல்வபுரம் ,செல்வ சிந்தாமணிகுளம், ஏரி மேடு, ஐ.யூ. டி .பி காலனி ,பொதுக் கழிப்பிடம் அருகே ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 90 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன, இது தொடர்பாக 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் புலிய குளம் ஏரிமேடு ,அம்மன் குளத்தைச் சேர்ந்த நவீன் ( வயது 27) செல்வபுரம், கல்லா மேடு கோபாலகிருஷ்ணன் ( வயது 19) சொக்கம்புதூர் ,எஸ் ஆர் .எஸ் . லே-அவுட் சியாம் கணேஷ் ( வயது 22) என்பது தெரியவந்தது..இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.