கோவையில் பாஜக-வினர் 250 பேர் கைது..!

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் விமானம் மூலம் கோவைக்கு வந்தார். அவர் கோவை மாநகராட்சி வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதற்காக உக்கடம்,டவுன்ஹால் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பாதுகாப்பு வளையத்தை மீறி 2 இளைஞர்கள் ஸ்கூட்டரில் உள்ளே புகுந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். துணை ஜனாதிபதிக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்று கூறி கோவை பா.ஜ.க. சார்பில் சிவானந்தா காலனி யில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இருப்பினும் ஏராளமான பா.ஜ.க.வினர் அங்கு குவிந்தனர். பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .காவல்துறை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர பா.ஜ.க. தலைவர் ரமேஷ் குமார் தலைமை தாங்கினார் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 250 பேரை காட்டூர் போலீசார் கைது செய்தனர்.அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.பின்னர் அவர்கள் ஜாமினில்விடுவிக்கப்பட்டனர்.