+2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது! வழக்கம் போல மாணவிகளே அதிகம் பாஸ்..!!

மிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி 25-ம் தேதி நிறைவடைந்தது.

இந்த தேர்வினை 7,518 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகள், 18, 344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் 3316 தேர்வு மையங்களில் எழுதினர்.

இதனையடுத்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 4ம் தேதி முதல் தொடங்கி ப்ரல் 17-ம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் 83 மையங்களில் விடைத்தாள் திருத்துதல் பணிகள் நடைபெறுகின்றன. சுமார் 46,000 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். முதலில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதி வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில் முன்கூட்டியே அதாவது 8ம் தேதியான இன்று வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படி இன்று காலை 9 மணிக்கு 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

தமிழகத்தில் 7,92,494 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 7,53,142 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி விகிதம் – 96.70 விகிதமும், மாணவர்கள் தேர்ச்சி விகிதம் – 93.16 விகிதமாகும். கடந்த ஆண்டுகளை விட கூடுதல் விகிதத்தில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்கள் தேர்ச்சி விகிதல் பற்றிய கூடுதல் விபரம்:

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் 98.82 சதவிகிதத்துடன் அரியலூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. ஈரோடு 97.98 சதவிகித்துடன் 2வது இடத்திலும், திருப்பூர் 97.53 சதவிகித்துடன் 3வது இடத்திலும், கோவை 4வது இடத்திலும், கன்னியாகுமரி 5வது இடத்திலும் உள்ளது.

12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை தமிழக அரசின் அதிகாரபூர்வ இணையதளங்களான www.tnresults.nic.in மற்றும் dge1.tn.nic.in
dge2.tn.nic.in ஆகியவற்றின் வாயிலாக தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். இது தவிர TN HSE(+2)Results என்கிற மொபைல் ஆப் மூலமாகவும் ரிசல்ட்டை தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.