கள்ள சந்தையில் மது விற்ற 2 பேர் கைது -106 பாட்டில்கள் பறிமுதல்..!

கோவை கவுண்டம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் நேற்று தடாகம் ரோடு ,கோவில் மேடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள பெட்ரோல் பங்க் எதிர்புறம் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அன்னூர் ,பிள்ளையப்பன் பாளையம் பண்ணையக்காடு பகுதியைச் சேர்ந்த சோமேஸ் (வயது 26) சிவகாசி ,கண்ணகி காலனியை சேர்ந்த ராஜ் (வயது 23) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 106 மது பாட்டில்களும், 4 இருசக்கர வாகனங்களும், ஒரு செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும். விசாரணை நடந்து வருகிறது.