மாணவர்களுக்கு கஞ்சா சிகரெட் விற்பனை செய்த 2பேர் கைது .

கோவை மே 16 கோவை ராமநாதபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் நேற்று மாலை புலியகுளம் கருப்பராயன் கோவில் பகுதியில் உள்ள பொதுக் கழிப்பிடம் அருகேரோந்து சுற்றி வந்தார் .அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 220 கிராம் கஞ்சாமற்றும் சிகரெட் இருந்ததுகண்டுபிடிக்கப்பட்டது..இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன இதை யடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் புலியகுளம் ஏரி மேடு இளங்கோவன் (வயது 24) அம்மன் குளம் ,நியூ ஹவுசிங் யூனிட் அரவிந்த் குமார் (வயது 23) என்பது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் கஞ்சாவை சிகரெட்டில் அடைத்து மாணவர்களுக்குவிற்பனை செய்தது தெரியவந்தது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.