கோவை குனியமுத்தூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மருதாம்பாள் நேற்று மாலையில் குனியமுத்தூர் ,மூவேந்தர் நகர் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள ஒரு பேக்கரி அருகே 2 பேர் நின்று கொண்டு தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்தது தெரிய வந்தது . இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் சிவகங்கை மாவட்டம் முடிக்கரையை சேர்ந்த முருகேசன் (வயது 44) குனியமுத்தூர் சேர்வை வீதியை சேர்ந்த மணிகண்டன் ( வயது 36) என்பது தெரிய வந்தது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..
கேரளா லாட்டரி டிக்கெட் விற்பனை – 2 பேர் கைது..!
