9 மாதங்களில் 26 லட்சம் பேர் வருகை .!!

கோவை விமான நிலையத்தில் இருந்து தினமும் 30 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் விமான போக்குவரத்தில் 2-வது பெரிய விமான நிலையமாக கோவை உள்ளது . இந்த நிதி ஆண்டில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 9 மாதங்களில் 25.89 லட்சம் பேர் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தி உள்ளனர் . இதன் மூலம் பயணிகள் போக்குவரத்தில் 8 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த டிசம்பர் 3-ந் தேதி முதல் இண்டிகோ விமான நிறுவனம் சந்தித்த ஒரு பெரிய செயல்பாட்டு நெருக்கடியால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் கோவையில் இருந்து விமான சேவைகள் குறைக்கப்பட்டன. கோவையிலிருந்து பயணிகள் போக்குவரத்தில் 9 சதவீதம் சரிவு ஏற்பட்டது. ஆனால் 2025 – ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களுடன் ஒப்பிடுகையில் பயணிகள் போக்குவரத்தில் 8 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனாலும் விமான நிலைய விரிவாக்கத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.