பொறியியல் கல்லூரிகளில் சேர 2.43 லட்ச மாணவர்கள் விண்ணப்பம்.!!

து வரையில் தமிழகம் முழுவதும் பொறியியல் படிப்புகளில் சேர 2.43 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் 440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், அண்ணா பல்கலைக்கழக துறைக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், தனியாா் சுயநிதி கல்லூரிகள் என அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும் அடங்கும். இக்கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்பில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் பொது கலந்தாய்வு முறையில் நிரப்பப்படும்.தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெற ஏராளமான மாணவா்கள் விண்ணப்பித்து வருகின்றனர். அந்த வகையில் பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் சேர இதுவரை 2.43 லட்சம் பேர் விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன.

தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்கனவே அறிவித்தபடி, பொறியியல் படிப்புக்கு இணையவழியில் விண்ணப்பிக்க ஜூன் 6ம் தேதி கடைசி நாள் ஆகும். பொறியியல் சேர்க்கைக்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவா்கள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் ஜூன் 6ம் தேதி வரை விண்ணப்பித்து பயனடைலாம்.

கடந்தாண்டில் 2.53 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், நடப்பாண்டில் தற்போது வரை 2.43 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க இன்னும் 12 நாட்கள் உள்ளன இந்நிலையில், பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.