தேசிய ஸ்கேட்டிங் போட்டிகளில் தங்க பதக்கங்களை குவித்த 1ம் வகுப்பு மாணவன்.!

கோவை ஜிடி பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வரும் ஹெம் கிரீஸ் என்ற பள்ளி மாணவர் சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற எஸ் எஸ் எஃப் ஐ தேசிய ரோலர் ஸ்கேட்டிங் பந்தயங்களில் 100 மீட்டர் ரோடு ரேஸ், 200 மீட்டர் ரிங் ரேஸ், 200 மீட்டர் ரிலே ரேஸ் ஆகிய மூன்று போட்டிகளில் தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இந்த தேசிய அளவிலான போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற ஹெம் கிரீஸ் சர்வதேச போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தங்க பதக்கங்களை வென்று கோவைக்கு திரும்பிய மாணவரை பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.