நீலகிரி மாவட்டம் நடுவட்டம் பேரூராட்சிக்குட்பட்ட பைக்காரா பகுதியில் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.இந்தப் பகுதியை சார்ந்த பாபு என்பவர் நிலத்தில் தொலைபேசி டவர் அமைக்க வாடகை ஒப்பந்தம் செய்துள்ளார். மாத வாடகை ரூ.35,000 ரூபாய்க்கு மேல் பெறுகிறர்.அவருடைய சொந்த இலாபத்திற்காக தொலைபேசி டவர் அமைத்ததினால் அப்பகுதியில் இயற்கை வனவிலங்குகள் பறவைகளின் இனப்பெருக்கம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று இயற்கை ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர். இதுபோன்ற தொலைபேசி கோபுரங்கள் பொதுமக்கள் வாழக்கூடிய இடங்களில் வைத்தாள் பலவிதமான நோய்களின் பாதிப்புகள் மனிதனை தாக்கக்கூடிய அபாயமும் உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் மருத்துவர்கள் எச்சரிக்கின்றன. சில இடங்களில் சட்டங்களை மீறி சுயலாபத்திற்காக மக்கள் வாழும் இடங்களில் தொலைபேசி கோபுரங்கள் வைப்பதால் அங்கு வாழும் வயது முதியோர்கள் சிறு குழந்தைகள் அங்கு அதிகமாக வரக்கூடிய சுற்றுலா பயணிகளை அதனுடைய கதிர் வீசுகள் மனிதனையும் பறவைகளையும் வனவிலங்குகளையும் பாதிக்கும் என்பதை விஞ்ஞான ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டு எச்சரித்து வருகின்றன. தற்போது உதகை பைக்கார பகுதியில் 195 அடி உயரத்தில் தொலைபேசி கோபுரம் 15 வருட காலமாக அமைந்துள்ளது. கடந்த மாதம் பெய்த புயல் மழையால் தொலைபேசி கோபுரம் பழுது ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் பகுதி மக்கள் ஒவ்வொரு நாளும் வாழ்கின்றனர். ஆனால் அப்பகுதியில் வாழ்கிறவர்கள் கோபுரத்தை நேரில் பார்த்த பொழுது மழையின் காரணமாக கட்டிடம் பழுதாகி உள்ளதால் தற்போது பைக்காரா மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளார்கள். தற்போது பெய்து வரும் கனமழை பலத்த காற்றுகளால் தொலைபேசி கோபுரம் விழுந்தால் பொருள் சேதம் மற்றும் உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்னதாக தொலைபேசி கோபுரத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி கூடலூர் தெற்கு மண்டல பாரதிய ஜனதா கட்சியினர் சார்பாக நீலகிரி உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு பைக்கார பகுதியில் இருந்து பாஜக கூடலூர் தெற்கு மண்டல் தலைவர் சுரேந்தர் தலைமையில 10கும் மேற்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து நாங்கள் வாழும் பைக்காரா பகுதிகளுக்கு ஆய்வு மேற்கொண்டு சட்டரீதியாக தொலைபேசி கோபுரத்தை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என்று பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கி உள்ளனர்..
195 அடி தொலைபேசி கோபுரம் விழும் அபாயம்..!
