கோவை ஜூன் 13 இராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 27) இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர் .இந்த நிலையில் நாகராஜ் கோவை
குனியமுத்தூர் பகுதியில் ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அப்போது அங்குள்ள ஒரு மளிகை கடைக்கு காய்கறி வாங்கிச் சென்றபோது கடையில் வேலை பார்த்து வந்த 16 வயது சிறுமியுடன்நாகராஜுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனை பயன்படுத்திக் கொண்ட நாகராஜ் அந்த சிறுமியைஆசை வார்த்தை காட்டி அவரை கடலாடி பகுதிக்கு கடத்திச் சென்று திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார் .சிறுமி காணாமல் போனது குறித்து பெற்றோர்கள் குனியமுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர் .இன்ஸ்பெக்டர் பானுமதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். தனிப்படை போலீசார்கடலாடிக்கு சென்று அங்கு தங்கியிருந்த நாகராஜையும் அந்த சிறுமியையும் பிடித்து கோவைக்கு கொண்டு வந்தனர் .இதை தொடர்ந்து நாகராஜ் கைது செய்யப்பட்டார். சிறுமி பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
16 வயது சிறுமியை கடத்தி திருமணம். ஓட்டல் தொழிலாளி போக்சோவில் கைது.







