சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவையில் குவிந்த 1500 போலீசார்.!!

கோவை : வருகிற ஆகஸ்ட் – 15 -ந் தேதி சுதந்திர தின விழாவையொட்டி போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் மேற்பார்வையில்கோவை மாநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கோவையில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபடுவார்கள்.ஓட்டல்கள், லாட்ஜ்கள், தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தப்பட உள்ளது.கோவில்கள், மசூதிகள் ,கிறிஸ்தவ ஆலயங்களில்,போலீஸ் பாதுகாப்புபோடப்பட உள்ளது.மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள்,மார்க்கெட் ஆகிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.விமான நிலையத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.கொடியேற்று விழா நடைபெற உள்ள மைதானம் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.கோவை மாநகரில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.கொடியேற்று விழா நடைபெற உள்ள வ. உ . சி. பூங்கா மைதானத்துக்குள் பார்வையாளர்கள் “மெட்டல் டிடெக்டர் ” சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.நகரில் ” டிரோன்கள் ” பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.