கோவை மே 16 கோவை ஒண்டிப்புதூர், செந்தில் நகர், சிவலிங்கபுரம், 5-வது வீதியைச் சேர்ந்தவர் ராஜகுமார் ( வயது 48) இவர் கடந்த 11 -ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் மதுரையில் உள்ள மனைவியின் பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார்.நேற்று அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்த பக்கத்து வீட்டில் வசிக்கும் ராஜசேகர் என்பவர் அவருக்கு செல்போனில் தகவல் கொடுத்தார். நேற்று மாலை அவர் வந்து பார்த்தபோது வீட்டில் பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகள்,வெள்ளி பொருட்கள், பணம் ரு 15, ஆயிரம் ஆகியவற்றையாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து ராஜகுமார் சிங்கநல்லூர் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் கபில்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஆள் இல்லாத வீட்டில் பூட்டை உடைத்து 15 பவுன் நகை -பணம் திருட்டு.
