கோவை மே 24கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் நவ்ஷாத் என்று சேனாதிபதி ( வயது 26 )இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் அதே பகுதியில் உள்ள 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம் . அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததால் அதிர்ச்சி அடைந்த சிறுமி சம்பவம் குறித்து தனது பாட்டியிடம் கூறி அழுதுள்ளார் .இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து சேனாதிபதியை போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தனர்.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை. போக்சோவில் வாலிபர் கைது.
