கோவை மே 14 கோவை மாவட்டம் பொள்ளாச்சி, வால்பாறை,பேரூர் மேட்டுப்பாளையம் உட்கோட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல்துறைக்கு தகவல் வந்தது.போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின்பேரில் போலீசார் நேற்று அந்தப் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது பொள்ளாச்சி குரும்பபாளையம் பகுதியில் கேரள லாட்டரி டிக்கெட் விற்றதாக கிருஷ்ணசாமி என்ற பாலு ( 55 ) கைது செய்யப்பட்டார். கோபாலபுரம் சோதனை சாவடி அருகே லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த திருச்சியை சேர்ந்த கிருஷ்ணன் (64 )கைது செய்யப்பட்டார். இதேபோல பொள்ளாச்சி ராமசாமி ( 67) ,நல்லட்டிபாளையம் ( 43 )சேர்த்துமடை காளியப்பன் (70) நெல்லி குத்து பாறை ராமச்சந்திரன் ( 67 ) வேட்டைக்காரன் புதூர் ரமேஷ் (44 )கரூர் கோபால் ( 43 )தாராபுரம் முனீஸ்வரன் (38) உடுமலை,புக்குளம் சந்திரன் (50 பொள்ளாச்சி ஜமீன் முத்தூர் பழனிச்சாமி ( 55 )திருப்பூர் விஜயபுரம் செல்வராஜ் (56) காரமடை காளம்பாளையம் ஆறுமுகம் ( 63 ) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட ஏராளமான கேரள லாட்டரி டிக்கெட்டுகளும்,பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை மாவட்டத்தில் கேரள லாட்டரி டிக்கெட் விற்ற 14 பேர் கைது
