கோவையை சேர்ந்தவர் 11 வயது மாணவி..அந்த பகுதியில் உள்ள டியூசன் ஆசிரியரிடம் பாடம் படிக்கச் சென்றார். அப்போது சிறுமிக்கு அந்த டியூசன் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது .இது குறித்து சிறுமி ஆசிரியரின் மனைவியிடம் கூறினார் .ஆனால் அவர் யாரிடமும் இது பற்றி கூறக்கூடாது என்று சிறுமியை மிரட்டியுள்ளார். இதை தொடர்ந்து சிறுமி தன்னுடைய பெற்றோரிடம் பாலியல் தொந்தரவு குறித்து கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கோவை தெற்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதன் பேரில் டியூசன் ஆசிரியர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. டியூசன் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
டியூசன் சென்ற 11 வயது மாணவி… பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் – மிரட்டிய மனைவி மீது வழக்கு.!!
