கோவை மே 16 கோவை மாநகர காவல் துறையில் பணியாற்றி வந்த 10 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர்கள் வருமாறு:- காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் சரவணம்பட்டி சட்டம் – ஒழுங்குக்கும் ,அங்கு பணியாற்றிய செந்தில்குமார் சிறப்பு நுண்ணறிவு பிரிவுக்கும் மாற்றப்பட்டனர். காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி ரத்தினபுரி குற்றப்புலனாய்வு பிரிவுக்கும், அங்கு பணியாற்றிய முத்துலட்சுமி வெரைட்டிஹால்ரோடு சட்டம் -ஒழுங்குக்கும், அங்கு பணியாற்றிய மீனாம்பிகை உக்கடம் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டனர். உக்கடம் குற்றப் புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமுனா, கடைவீதி சட்டம் ஒழுங்குக்கும் சாய்பாபா காலனி குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி கவுண்டம்பாளையத்துக்கும் ,அங்கு பணியாற்றிய இன்ஸ்பெக்டர் தங்கமணி சாய்பாபா காலனி குற்றப் புலனாய்வு பிரிவிற்கும் காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் அசோக் குமார், அன்புமணி ஆகியோர் போத்தனூர் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவுக்கும் பணியிட மற்றும் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் பிறப்பித்துள்ளார்.
கோவையில் 10 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்.
