தமிழக வெற்றிக்கழக கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் தமிழக வெற்றிக்காக தலைவர் விஜய் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்வது என்றும், அவர் தலைமையில் கூட்டணி அமைப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த உறவுகளுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெண்கள் பாதுகாப்பு தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 35 மீனவர்கள் கைதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாட்டில் வாக்காளர்களின் ஜனநாயக கடமையான வாக்குரிமையை பறிக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை நிறுத்த கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளிடம் உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாமல், நெல் உள்ளிட்ட தானியங்கள் மழையில் நனைந்து மூட்டையிலேயே முளைத்து வீணாகும் நிலைக்கு காரணமான, விவசாயிகள் விரோத ஆட்சியாளர்களுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வடகிழக்கு பருவமழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருப்பதால், தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மழைநீர் வடிகால்களை சீரமைத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே செய்து முடிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாதுகாக்கப்பட்ட ராம்சர் சதுப்புடலத்தில் கட்டுமானம் கட்ட தனியா நிறுவனத்திற்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மக்கள் சந்திப்பு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கழக தலைவருக்கும், அவரை காண வரும் பொது மக்களுக்கும், பாரபட்சம் இல்லாமல் தமிழக அரசு முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கழகத்தின் மீதும், கழக நிர்வாகிகள் மீதும், தோழர்கள் மீதும், அரசியல் கால் புணர்ச்சியுடன் அவதூறுகளை பரப்பும் ஆளுங்கட்சியின் கைக்கூலிகளாக செயல்படுபவர்களுக்கு கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக தொழில் துறைக்கு வந்திருக்கும் முதலீடுகள் அவற்றின் மூலம் உருவான வேலை வாய்ப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாட்டில் ஜனநாயக அடிப்படையில் பொது பிரச்சனைகளில் கருத்து தெரிவி ப்பவர்களை கைது செய்து, அவர்களின் கருத்து உரிமையை சிதைக்கும் வெற்றி விளம்பரம் மாடல் அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
கூட்டணியின் நிலைப்பாட்டில் தலைவருக்கும் முழு அதிகாரம் வழங்கும் தீர்மானம் முழுமனதாக நிறைவேற்றப்பட்டது.






