தூத்துக்குடி: மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் திமுக தலைவரும்,தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி கருணாநிதியை ஆதரித்து தூத்துக்குடி காமராஜர் மார்கெட் பகுதிகளில் வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் இன்று (மார்ச் 26) காலை வாக்கு சேகரித்தார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், ...

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தன்னை விடுவித்து சிவகங்கை நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் எந்த தவறும் இல்லை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. கடந்த 2001-06 அதிமுக ஆட்சிகாலத்தில் வருவாய்த் துறை அமைச்சராக பதவி வகித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.77 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக 2006-ம் ஆண்டு ...

தேனி: தேனி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை வெற்றி பெறச் செய்ய முடியாவிட்டால் அடுத்த நாளே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என ஆவேசமாகப் பேசியுள்ளார் அமைச்சர் மூர்த்தி. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், ...

வேட்பு மனுத் தாக்கலில் ஆட்சியர் உறுதிமொழி படிவத்தை வாசிக்கச் சொன்னபோது `தமிழ் தெரியாது’ என்று விருதுநகர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கூறினார். இதையடுத்து ஆட்சியர் வாசிக்க, பின் தொடர்ந்து உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார். தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அருகே உள்ள மேலக்கலங்கலைச் சேர்ந்தவர் சி.கவுசிக் (27). மருத்துவரான இவர், நாம் தமிழர் கட்சியின் மருத்துவர் ...

நீலகிரி தனி பாராளுமன்ற தொகுதி 107 பவானிசாகர் சட்டமன்ற தனி தொகுதிக்குட்பட்ட தாளவாடி வட்டம் அரேபாளையம் பிரிவில் ( 23.3.2024) காலை சுமார் 11.15 மணியளவில் பறக்கும் படை குழுவினர் (குழு எண். Fst-1) வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது(TN 36T3274)எண் கொண்ட ஈச்சர் டெம்போ வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி ரூபாய் 250000. கனகன் ...

கோவை : கோவில் பீளமேடு ஏ.டி. காலனியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி சூரியகலா ( வயது 55) இவர் இரத்த அழுத்தம் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தாராம். அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ...

கோவை உப்பிலிபாளையம் ஏ. ஆர் .கே .ரோடு, கோ – ஆப்ரேட்டிங் காலனியை சேர்ந்தவர் ஜீவராம். இவரது மனைவி சிந்தியா ( வயது 50) கணவன் – மனைவி இருவரும் நேற்று காரில் ரேஸ்கோர்ஸ் சென்றனர். அங்கு காரை நிறுத்திவிட்டு நடை பயிற்சி செய்தனர். பின்னர் காரில் ஏறி வீட்டுக்கு வந்து விட்டனர். வீட்டில் வந்து ...

கோவை சுந்தராபுரம், சிட்கோ, பிள்ளையார் கோவில் சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மகன் நவநீதன். ( வயது 17) மதுக்கரையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் பிளஸ் 2 படித்து வந்தார். இவரது நண்பர் தனுஷ் கடந்த மாதம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதில் இருந்து நவநீதன் மன அழுத்தத்துடன் காணப்பட்டு வந்தார். இந்த ...

கோவை புது சித்தாபுதூர், இந்திரா காந்தி நகரை சேர்ந்தவர் அய்யாசாமி. இவரது மனைவி திலகம் (வயது 52) இவர் ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் தனது உறவினர்களான ஹரிஹரசுதன்,சாந்த மணி ஆகியோர் தன்னிடம் மசாலா பொடி ஏற்றுமதி செய்வதாகவும், அதில் முதலீடு செய்தால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறினார்கள். இதை நம்பிய ...

கோவை : தெலுங்கானா மாநிலம், சித்தி பேட்டை, கஜ்வீலை சேர்ந்தவர் டொமலா மம்தா (வயது 40) இவர் தனது தாயார் ஜெயம்மாவுடன் ஈஷா யோகா மையத்திற்கு செல்வதற்காக கோவைக்கு ரயிலில் வந்தார். ரயிலை விட்டு இறங்கி ஆட்டோ ஏறுவதற்கு நடந்து சென்றனர். அப்போது ஜெயம்மா கழுத்தில் கிடந்த 4 பவுன் செயினை காணவில்லை . யாரோ ...