குழந்தையின் பிறப்பு பதிவேட்டில் தாய், தந்தை என இருவரின் மதத்தையும் குறிப்பிட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் பிறப்பு, இறப்புச் சட்டத் திருத்தத்தின் மாதிரி விதிகளின் படி, இதுவரை குடும்பத்தின் மதம் மட்டுமே பிறப்பு பதிவு ஆவணத்தில் பதிவான நிலையில், பிறப்பு பதிவுக்கான படிவம் 1-ல் சில திருத்தங்களுடன் ...

மயிலாடுதுறை மாவட்டத்தில் உலா வரும் சிறுத்தை மீண்டும் ஒரு ஆட்டை கொன்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நெருக்கடி காரணமாக விலங்குகளின் வாழ்விடங்களை ஆக்கிரமித்து கொள்வதால் அவ்வப்போது வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து வரும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்படி ஒரு சம்பவம் ...

கிருஷ்ணகிரி அருகே பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி – ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குருபரப்பள்ளி கிராமத்தில் பாரத ஸ்டேட் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் அமைந்திருக்கிறது. இந்த மையத்தில் நேற்று (ஏப்ரல் – 6) ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான தொகையை ...

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் புகழேந்தியின் உயிர் பிரிந்தது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் புகழேந்தி. 71 வயதாகும் இவர் கல்லீரல் பாதிப்பு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ...

வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஏடிஎம் இயந்திரங்களில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதியை கொண்டுவர உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து ஏடிஎம் இயந்திரங்களிலும் தற்போது வரை டெபிட் கார்டுகள் மூலம் பணம் டெபாசிட் செய்து வரப்படும் சூழலில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் ...

நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நீலகிரி பாராளுமன்ற கழக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் அவர்களை ஆதரித்து எதிர்கட்சி தலைவரும் அதிமுக கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நீலகிரி மாவட்டம் குன்னூர் உதகைக்கு வருகை புரிந்தார், தேர்தல் பிரச்சார கூட்டத்தை நீலகிரி அ திமுக மாவட்ட செயலாளர் கப்பச்சி டி வினோத் தலைமையில் முன்னாள் ...

கோவை : சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் பயணிப்பவர்கள், முறையற்ற வகையில் பயணிப்பவர்கள், பதிவு செய்யாமல் சரக்குகளை ரயிலில் கொண்டு செல்பவர்கள் ரயில்வே பரிசோதனை அதிகாரிகளால் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ...

கோவை மாவட்டத்தில்கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில் மேட்டுப்பாளையம், சிறுமுகை பழத்தோட்டம் ரெஸ்ட் ஹவுஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் ( வயது 49 )மேட்டுப்பாளையம் வனச்சரக சுண்டப்பட்டி பிரிவில் வனகாவலராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் வெங்கடேஷ் நேற்று மதியம் வனக்காப்பாளர் ராஜ்குமார், வேட்டை தடுப்பு காவலர் நாகராஜ் ஆகியோருடன் ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அய்யாவு .இவரது மகன் ராமச்சந்திரன் (வயது 29) இவரை முன் விரோதம் காரணமாக கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மனோகரன் மகன் திலீப் (19)மற்றும் மருதாச்சலம் மகன் கௌரிசங்கர் (21) ஆகியோர் மீது மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேற்படி ...

கோவை : வடகோவை முத்துமாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் இளங்கோ. இவரது மனைவி அனிதா (வயது 29 ) இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் யூசுப் (வயது 19) குடிப்பழக்கம் உடையவர். இவர் தினமும் குடித்துவிட்டு வந்து அனிதாவிடம் தகராறு செய்வாராம். இந்த நிலையில் நேற்று வீட்டின் முன்நின்று கொண்டிருந்த அனிதாவை யூசுப் கைகளால் தாக்கி ...