கோவை சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சப் இன்ஸ்பெக்டர் முத்து இருளப்பன் ஆகியோர் நேற்று சரவணம்பட்டி – துடியலூர் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி அருகே ரோந்து சுற்றி வந்தனர் . அப்போது மறைவான இடத்தில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 2 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ...
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, கிழக்கு, திருவெறும்பூா், லால்குடி, மண்ணச்சநல்லூா், முசிறி, துறையூா் (தனி) ஆகிய 9 சட்டப் பேரவை தொகுதிகளில் வரும் 19ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதில் திருச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட திருச்சி மேற்கு, கிழக்கு, திருவெறும்பூா், திருவரங்கம், புதுக்கோட்டை, கந்தா்வகோட்டை ஆகிய 6 பேரவைத் தொகுதிகளில் ...
ஆவடி: சைபர் கிரைம் சம்பந்தப்பட்ட குற்றங்கள் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு முகாம்.. இன்டோர் முகாம் நடத்தி இணைய வழி நிதி மோசடி சம்பந்தப்பட்ட இசட் எப் கமர்சியல் வெய்க்கில் கண்ட்ரோல் சிஸ்டம் ஸ் இந்தியா லிமிடெட் அத்திப்பட்டு அம்பத்தூர் தொழில்பேட்டையில் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் இயக்குனர் சஞ்சய் குமார் ஆவடி போலீஸ் கமிஷனர் சமூக சேவகர் ...
கோயமுத்தூர் மாவட்டத்தில் பிரபலமாக இயங்கி வரும் முத்து எலும்பு மருத்துவமனை தனது மூன்றாவது கிளையினை சூலூர் பகுதியில் நிறுவியுள்ளது. கடந்த ஓராண்டுகளில் சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் தங்களின் மருத்துவமனைக்கு வருகை தந்திருப்பதாகவும் மேலும் தற்போது இருக்கின்ற போக்குவரத்து நெரிசலில் விரைவான அவசர சேவைகளை பயன்படுத்துவதற்கு முடியாதாலும் சூலூர் பகுதியில் ...
கோவை: பஞ்சாப் ,அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் விவசாயி ஒருவர் பலியானார். இதனால் அந்த விவசாயின் அஸ்தியை கிஷான் மஸ்தூர் மோட்சா என்ற விவசாய அமைப்பின் தலைவர் சர்வன்சிங் உள்ளிட்ட விவசாயிகள் நாடு முழுவதும் எடுத்துச் சென்று வருகிறார்கள். தற்போது ...
கோவை புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மரிய ரூவீனா . இவர் பாப்பநாயக்கன்பாளையம் , நேதாஜி ரோட்டில் உள்ள செட்டிநாடு ஓட்டலில் மதிய உணவாக தயிர் சாதம் சுவிகி மூலம் 164 ரூபாய் கொடுத்து வாங்கினார். அந்த தயிர் சாத பாக்கெட்டை பிரித்துப் பார்த்தபோது சாதத்தில் புழு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்த அவர் சுவிகி நிறுவனத்தை ...
வடமாநில தொழிலாளி குத்திக் கொலை : செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபர் வெறி செயல் – கோவையில் பரபரப்பு!!! கோவை, கிராஸ்கட் சாலை, சுமங்கலி ஜூவல்லர்ஸ் நகைக் கடை பின்புறம் தனியாருக்கு சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. அதற்காக உத்தர பிரதேஷ் மாநிலத்தில் இருந்து 6 தொழிலாளர்கள் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ...
அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய உத்தரவு. கடந்த பிப்ரவரி 19 முதல் மார்ச் 8ம் தேதி வரை சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் குறிப்பாக, திண்டுக்கல் வடமதுரை ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு ...
புதுடெல்லி: ‘இந்தியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுவிட்டு பாகிஸ்தானுக்கு தீவிரவாதிகள் தப்பி ஓடினால் அங்கேயே சென்று அவர்களை அழிப்போம்’ என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியிருக்கிறார். முன்னதாக பிரிட்டனின் புகழ்பெற்ற கார்டியன் பத்திரிகையில், ‘இந்தியா கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் பாகிஸ்தானில் 20 ...
அமெரிக்காவின் இல்லினாய்ஸில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் மறைந்திருக்கும் மாபெரும் நீர்த்தேக்கத்தைக் கண்டுபிடித்துள்ளனர். நிலத்தடி கடல் என்று குறிப்பிடப்படும் இந்த பிரம்மாண்டமான நீர்த்தேக்கம் பூமியின் மேற்பரப்பில் உள்ள அனைத்து கடல்களையும் விட மூன்று மடங்கு பெரியது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 700 கி.மீ. ஆழத்தில் உள்ளது ...