கோவை : நாடாளுமன்றத் தேர்தல் வருகிற 19-ம் தேதி நடைபெறுகிறது. காவல்துறையில் பணியாற்றக் கூடியவர்கள் தேர்தல் நாளில் பணியில் ஈடுபட்டிருப்பதால் அவர்கள் முன்கூட்டி ஓட்டுக்கள் போடுவதற்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள காவலர் சமுதாயக்கூடத்தில் இதற்கான வாக்கு மையம் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் துணை கமிஷனர் ...

கோவை சிங்காநல்லூரை அடுத்த ஒண்டிப்புதூர் சூர்யா நகர், சிவலிங்கபுரம், காமாட்சிபுரம், சக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில் சூர்யா நகர் ராமச்சந்திரா சாலையில் ரயில்வே கிராசிங் உள்ளது. இப்பகுதியில் இருந்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் பணிக்கு செல்பவர்கள் ரயில்வே கேட்டை கடந்து தான் செல்ல வேண்டி நிலை உள்ளது. அடிக்கடி ...

ஜம்மு-காஷ்மீரில் விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மக்கள வைத் தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் போட்டி யிடுகிறார். அந்த தொகுதிக்கு வரும் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நேற்று உதம்பூரில் பிரச்சாரம் செய்தார். ...

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் வருகிற செப்டம்பர் மாதம் இந்தோனேசியா, கிழக்கு திமோர், பப்புவா நியூ கினியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய 4 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் என வாடிகன் தேவாலயம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதன்படி போப் பிரான்சிஸ், வரும் செப்டம்பர் 2-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை ஜகார்த்தா, போர்ட் மோர்ஸ்பி, வனிமோ, பப்புவா ...

சென்னை: திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக கூறி தேர்தல் ஆணையத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்குத் தொடர்ந்துள்ளது. தேர்தல் விளம்பரம் செய்ய அனுமதி கோரிய திமுகவின் விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் நிராகரித்த நிலையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் தொடரப்பட்டுள்ள ...

சென்னை: தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளதால் பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் முதல்கட்டமாக 39 நாடாளுமன்ற தொகுதிக்கும் வருகிற 19ம் தேதி (வெள்ளி) வாக்குப்பதிவு நடக்கிறது. தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு இதுவரை ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ...

புதுடெல்லி: இந்திய விமானப் படைக்கு புதிதாக 97 தேஜஸ் போர் விமானங்களை வாங்க ரூ.65,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு மத்திய பாதுகாப்புத் துறை வழங்கி உள்ளது. இந்திய விமானப் படையில் மிக் 21, மிக் 23, மிக் 27 ரகங்களை சேர்ந்த பழைய போர் விமானங்களுக்குப் பதிலாக புதிய போர் விமானங்களை ...

கிழக்கு ஆசிய நாடுகளில் தற்போது நிலவிவரும் கடுமையான வெப்ப அலை காரணமாக 24 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஐக்கிய நாடுகள் சபை மக்களுக்கு அறிவித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கடும் வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக பெரியவர்களை விட குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் ...

18வது மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே தேர்த களம் சூடுபிடித்துள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதில் முதல் கட்டத்தில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறுகிறது. மக்களவை தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளதால், தமிழ்நாடு பரபரப்பாக உள்ளது. ...

அரியலூர்: மயிலாடுதுறை செம்மங்குளம் பகுதியில் கடந்த 2ம் தேதி நள்ளிரவு சிறுத்தை நடமாட்டம் இருந்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த வனத்துறை, தீயணைப்பு துறை, காவல் துறையினர் சிறுத்தையை தேடும் பணியை தொடங்கினர். சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்ட செம்மங்குளம், ஆரோக்கியநாதபுரம், சித்தர்காடு, ஊருகுடி, மறையூர், மயிலாடுதுறை ...