சென்னை அசோக் நகர் காசி சினிமா தியேட்டர் பாலம் அருகே பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பொதுநல சங்கங்கள் சார்பாக போலீஸ் உதவி மையத்தை விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ எம் வி பிரபாகராஜா குத்துவிளக்கேற்ற 138 வது வார்டு கவுன்சிலர் கே. கண்ணன் கல்வெட்டை திறந்து வைக்க எம்ஜிஆர் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை சன்னதி தெருவில் நேற்று இரவு நிறுத்தப்பட்டிருந்த காரில் முன் இருக்கை பகுதியில் வரிசையாக மண்டை ஓடுகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. திருவண்ணாமலை டவுன் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, வாரணாசி பகுதியில் இருந்து அகோரி ஒருவர் திருவண்ணாமலைக்கு காரில் வந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவர் மாட வீதி வழியாக ...
குஜராத்: குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது. நேற்று நண்பகல் 12 மணியளவில் 50 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் குழந்தை தவறி விழுந்தது. 17 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அதிகாலை 5 மணி அளவில் குழந்தை மீட்கப்பட்ட நிலையில் மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக ...
சாதி மறுப்பு திருமணம் நடத்தி வைத்ததற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் சூறையாடப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் உள்ளது. இங்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது பெண், வேறு சமூகத்தை சார்ந்த இளைஞரை காதலிப்பதாக கூறி இருவரும் ...
கோவை சாய்பாபா காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ,சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் நேற்று பி.என்.புதூர் மடத்தூர் பகுதியில் உள்ள ஒருகாலி மைதானம் அருகே ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு ஜீப்பில் வந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஒரு கிலோ 500 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஜீப்பும், கஞ்சாவும் பறிமுதல் ...
கோவை : தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வான் கரம்பேட்டையைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்.இவரது மகன் கணேசன் (வயது 36) கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தார்.நேற்று வேலை முடிந்த பிறகு அங்குள்ள இரும்பு பைப்பை தொட்டார். அப்போது அவரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் ...
கோவை செட்டிபாளையம் பிரிவு, மரப்பாலம், தர்மராஜ் நகரை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 40)பேக்கரியில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தனது நண்பர் லோகநாதன் மூலம் வெள்ளலூர் என்.ஜி.ஆர். சாந்தி (வயது 39) என்ற பெண் அறிமுகமானார் .தனக்கு அரசியல் வட்டாரத்திலும், மாநகராட்சியிலும் உயர் அதிகாரிகள் தெரியும்..அவர்கள் மூலமாக பெரியசாமியின் மகளுக்கு கோவை மாநகராட்சியில் அலுவலக ...
கோவை கரும்புக்கடை,ஆசாத் நகர் எம்.ஜி.ஆர். வீதியைச் சேர்ந்தவர் ஜெய்லாபுதீன் ( வயது 55) மர வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் கேரள மாநிலம் திருச்சூர் சாலக்குடியைச் சேர்ந்த கே. எம் . லிபு ( வயது 45 )என்பவர் அறிமுகமானார்..அவர் அவருக்கு தெரிந்த குனியமுத்தூர் திருவள்ளூர் நகரை சேர்ந்த ஷாஜகான் என்பவரை ஜெயிலிலா புதினுக்குஅறிமுகம் செய்து ...
கோவையில் இன்று திமுக முப்பெரும் விழா நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இந்த விழாவுக்காக கொடிசியா மைதானத்தில் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. விழாவில் பங்கேற்க முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதியம் 12 – 20 ...
கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 30) கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த13 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.இது குறித்த புகாரின் பேரில்இவரை செல்வபுரம் போலீசார்போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர் .இது தொடர்பான வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடந்து ...













