டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் மதுக் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சர்க்கரையின் அளவு ஏற்ற இறக்கமாக இருப்பதால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தனது வழக்கமான மருத்துவரை அணுக அனுமதி கோரி கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை (ஈ.டி.) வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு ...
வாக்குப்பதிவு குறைந்தது குறித்து மக்கள் தான் சிந்திக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் நேற்று தொடங்கிய நிலையில், ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 40 தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் ...
சென்னை: தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் நேற்று தொடங்கியது. தமிழ்நாடு, புதுவை உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் ...
சென்னை: மக்களவை தேர்தலின் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. எந்த வித சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் இன்றி அமைதியாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. வெப்பஅலை வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்ததால், பொதுமக்கள் காலை 6.30 மணிக்கே அதிகளவில் வந்து, வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இது வாக்குப்பதிவு சதவீதத்தில் பிரதிபலித்தது. ...
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்தது. முதல் கட்டமாக தமிழ்நாடு, ராஜஸ்தான், மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழ்நாட்டை ...
கோவை: கோவை பி.என்.புதுாரில் உள்ள ஓட்டுச்சாவடி அருகே, 200 மீட்டருக்கு அப்பால் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர், வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த போலீசார், ‘கூட்டம் கூடக் கூடாது, கட்சி சின்னத்தை வைத்திருக்க கூடாது’ என்று கூறியுள்ளனர். கட்சி சின்னத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அங்கு போடப்பட்டிருந்த பந்தலை அகற்ற ...
மேட்டுப்பாளையம்: நல்ல உடல் நலமுடன், படித்தவர்கள் பலர் ஓட்டு போடாமல் வீட்டில் இருந்தனர். ஆனால், தன் 108 வயதிலும், பத்மஸ்ரீ பாப்பம்மாள் பாட்டி, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வரிசையில் நின்று ஓட்டளித்தார். காரமடை அருகே தேக்கம்பட்டி கிராமத்தில் வசிப்பவர் பாப்பம்மாள், 108; விவசாயி. பத்மஸ்ரீ விருது பெற்றவர். இந்த தள்ளாத வயதிலும், தன் ஜனநாயக கடமையை ...
சென்னை: தமிழக போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் சென்னை காவல் ஆணையரை சந்தித்து பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில் தனது புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் டி.பி.யாக வைத்து சக அதிகாரிகளிடம் பணம் வசூலிக்கிறார்கள் என்று சிலர் மீது குற்றம்சாட்டினார். தமிழ்நாட்டில் உள்ள முக்கிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை குறிவைத்து பல்வேறு சமூக ஊடக தளங்களில் ...
கோவை : கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், மன்னார்காடு அடர்ந்த வனப்பகுதியில் சிறுவாணி அணைய உள்ளது. 50அடி உயரம் கொண்ட இந்த அணையின் ஒரு பகுதியில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு அங்கிருந்து குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த அணையில் இருந்து தினமும் 10 கோடி லிட்டர் (100 எம். எல். . டி) தண்ணீர் எடுக்கலாம் ...
கோவை ரேஸ்கோர்ஸ் அருகே உள்ளது கே.ஜி திரையரங்கம். கோவையில் பிரபலமான இந்த திரையரங்கில் ஆவேசம் என்ற திரைப்படம் வெளியிடப்பட்டது. நேற்று மாலை திரையரங்கில் படம் போட்ட பின்பு ஏ.சி வேலை செய்யாமல் இருந்ததாக ரசிகர்கள் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் திரையரங்கு நிர்வாகத்தில் புகார் அளித்தனர். ஆனால் நிர்வத்தினரிடம் இருந்து முறையாக ...