தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பாலக்கரை அருகே நேற்று இரவு பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகர பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்பொழுது சாலையின் நடுவே போதையில் இளைஞர்கள் நின்று கொண்டு இருந்தனர். அவர்களுக்கும் பேருந்து ஓட்டுனருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக ஆத்திரமடைந்த இளைஞர்கள் அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை பேருந்துக்குள் தாக்கியதுடன் ...
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. தேரோட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் ...
திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் நகர் நல சுகாதார மையம் அமைந்துள்ளது. இந்நகர் நல மையத்தில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தினந்தோறும் சுமார் 100 பேருக்கு மேல் காய்ச்சல் தலைவலி நீரிழிவு மற்றும் மகப்பேறு சிகிச்சை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நகர் நல மையத்தில் நேற்று மாலை அப்பகுதியில் வசிக்கும் குடிபோதை ஆசாமிகள் அடாவடித்தனமாக நகர் ...
திருவள்ளூர்: ஸ்ரீ பெருமந்தூர் காவல் நிலையத்தில் பயங்கர ரவுடி லிஸ்டில் உள்ள பிபிஜி சங்கர் கொலையில் இவனது பெயரை பொதுமக்களிடம் சொன்னால் திரும்பிப் பார்க்காமல் தலை தெரிக்க ஓடுவார்கள். இவன் கடந்த 13.4.2024 அ ன்று புட்லூர் பகுதியில் அவனது கூட்டாளிகளுடன் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அவர்களிடம் ...
தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட செம்மஞ்சேரி அடுத்த கண்ணகி நகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் மாலை 4.30 மணி அளவில் எழில் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தலைமை காவலர் புஷ்பராஜ் மற்றும் காவலர் சிலம்பரசன் இருவரும் ரோந்து சுற்றி வரும் போது எழில் நகர் 16 வது பிளாக் அருகில் 1. ...
கோவை, சரவணம்பட்டி காவல் நிலைய புலனாய்வு பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் பாலகுமார் வயது 38 கோவை கணபதி பகுதியில் உள்ள வேளாண்ங்கண்ணி நகரில் மனைவி சுமதி (37), மகன் சாய் அபினவ் (11), சாய் அக்ஷதா (8) ஆகியோருடன் குடும்பத்துடன் வாடகை வீட்டில் குடியிருந்து வந்து உள்ளார். இந்நிலையில், மனைவி சுமதி கடந்த ...
டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் மதுக் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சர்க்கரையின் அளவு ஏற்ற இறக்கமாக இருப்பதால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தனது வழக்கமான மருத்துவரை அணுக அனுமதி கோரி கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை (ஈ.டி.) வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு ...
வாக்குப்பதிவு குறைந்தது குறித்து மக்கள் தான் சிந்திக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் நேற்று தொடங்கிய நிலையில், ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 40 தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் ...
சென்னை: தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் நேற்று தொடங்கியது. தமிழ்நாடு, புதுவை உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் ...
சென்னை: மக்களவை தேர்தலின் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. எந்த வித சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் இன்றி அமைதியாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. வெப்பஅலை வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்ததால், பொதுமக்கள் காலை 6.30 மணிக்கே அதிகளவில் வந்து, வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இது வாக்குப்பதிவு சதவீதத்தில் பிரதிபலித்தது. ...