மார்ச் 16ம் தேதி பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, தேர்தல் நடத்தை விதிமுறை நடைமுறைக்கு வந்தது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பறக்கும் படைகள், நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர சோதனைகள் நடைபெற்று வந்தன. இந்தக் குழுக்கள் மூலம் நடத்தப்பட்ட வாகன சோதனைகளின்போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட கோடிக்கணக்கான பணம், ...
7 கட்டமாக நடைபெறும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19-ஆம் தேதி நடைபெற்றது. முதல் கட்டத்தில் தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.இந்த 2ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு ...
நீலகிரி: கோடநாடு பங்களா கொலை கொள்ளை வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அதிமுக பிரமுகரும், அந்த கட்சியின் முன்னாள் வர்த்தக அணி செயலாளருமான சஜீவனின் வீட்டில் ரத்தம் படிந்த கோடாரி, துப்பாக்கிகள் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து அவர் தலைமறைவாக இருக்கும் நிலையில் அவரை கைது செய்ய அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். ...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் மாடியில் அலுவலர்கள் ஓய்வு எடுக்கும் அறைக்கு வெளியே 26 வயது மதிக்கத்தக்க இளம் பெண் கருப்பு கலர் துணியால் இரும்பு ஸ்டாண்டில் தூக்கில் தொங்கியவாறு அமர்ந்த நிலையில் பிணமாக கிடந்தார். நீல நிற ஜீன்ஸ் பேண்டும் கருப்பு நிற முழு கை சட்டை அணிந்திருந்தார். இவரை யாராவது கொலை ...
ரூ.5,785 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ள தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரே மக்களவைத் தேர்தலில் மிக அதிக சொத்து உடையவர் என்று தெரிய வந்துள்ளது. ஆந்திரத்தின் குண்டூர் மக்களவைத் தொகுதியில் தெலுங்கு தேசம் சார்பில் அக்கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) பிரிவைச் சேர்ந்த மருத்துவரும் தொழிலதிபருமான பி.சந்திரசேகர் போட்டியிடுகிறார். வேட்புமனுவில் தெரிவித்துள்ள விவரங்களின்படி, சந்திரசேகர், ...
பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. கடந்த மாதம் ‘பதஞ்சலி’ நிறுவனம் மீது தவறான விளம்பரங்கள் வெளியிடுவதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதஞ்சலி விளம்பரங்களில் தவறான தகவல்களை வெளியிடக்கூடாது என்று எச்சரித்த சுப்ரீம் கோர்ட், ...
கடும் வெயில் காரணமாக பொது மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். நண்பகல் நேரங்களில் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் கர்ப்பிணிகள், முதியோர், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என மக்களுக்குத் தொண்டு ஆற்றுவதிலும், மக்கள் நலனில் ...
திருச்சி தென்னூா் அண்ணா நகரில் பிரசித்திபெற்ற உக்கிர மாகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. சோழ மன்னா்களின் குல தெய்வமான மகிஷாசுரமா்த்தினியின் வடிவமாக விளங்கிவரும் உக்கிரமாகாளியம்மன், அப்பகுதி மக்களைக் காத்து வருவதாக நம்பப்படுகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறு ம் குட்டி குடித்தல் மற்றும் தோ் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். மேலும் கோயிலுக்கு ரூ. 60 லட்சத்தில் புதிதாக ...
இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆா்சிடிசி) சாா்பில் கோடை காலத்தில் ரயில் பயணிகளுக்கு, குறிப்பாக முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு மலிவு விலையில் உணவு விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி, 200 கிராம் எடையில், எலுமிச்சை, புளியோதரை, தயிா் சாதம் அல்லது கிச்சடி என ஏதாவது ...
கோவை – அவிநாசி சாலை உப்பிலிபாளைத்தில் உள்ள தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 16 – ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அப்போது பல்வேறு சீர்வரிசை பொருட்களை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து ...