தமிழ்நாட்டில் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி குறித்து வழிகாட்டும் நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது. இதனை அனைத்து மாவட்டங்களிலும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சிபெற்று உயர்கல்விக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்விக்கான வாய்ப்புகள் குறித்து வழிகாட்டும் வகையில், கல்லூரி கனவு நிகழ்ச்சியை, கடந்த 2022-ஆம் ஆண்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். நான் முதல்வன் ...
கோவையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். கோவை மே 8பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த போட்டியில் போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூராக பேசியதாக தெரிகிறது. மேலும் மகளிர் போலீசார் குறித்தும் பாலியல் தொடர்பான கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுகன்யா புகார் செய்தார். ...
கோவை : பாலக்காட்டை சேர்ந்தவர் ஏ.வி. முகேஷ் (வயது 34) இவர் பாலக்காடு மாவட்ட மாதர்பூமி பத்திரிகையின் தலைமை போட்டோகிராபராக உள்ளார். இவர் இன்று காலையில் பாலக்காடு பக்கம் உள்ள கோட்டைக்காடு பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதை அறிந்து அங்கு புகைப்படம் எடுக்க சென்றார். அங்குள்ள ஆற்றை யானைகள் கடக்கும் போது புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். ...
கோவையில் கடும் வெப்பம் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. அதே போல சிறுவாணி அணை, பில்லூர் அணை, ஆழியார் அணை உள்ளிட்ட பல்வேறு அணைகளில் நீர்மட்டம் மிகவும் குறைந்து உள்ளது. இதனால் குடிநீருக்கு பஞ்சம் ஏற்பட்டு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதிஷ் தலைமையில் கோவை ...
கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி ( வயது 50) வீட்டு வேலை செய்து வருகிறார். இவர் நேற்று வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை அதே பகுதியைச் சேர்ந்த எட்வின் (வயது 60) என்பவர் முன் விரோதம் காரணமாக வழிமறித்து தகராறு செய்தார் . பின்னர் அவர் மறைத்து ...
கோவை ஒண்டிப்புதூர் நாராயணசாமி லேஅவுட் டை சேர்ந்தவர் பால்ராஜ். உருளைக்கிழங்கு வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ரோஸ்லின் (வயது 35) இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். சில மாதங்களாக ரோஸ்லின் ஒருவருடன் நட்பு வைத்திருந்தாராம். இதை இவரது கணவர் பால்ராஜ் கண்டித்தார். இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் ரோஸ்லின் ...
கோவையில் நேற்று ஒரே நாளில் நடந்த வெவ்வேறு சாலை விபத்தில் 3 பேர் பலியானார்கள். அதன் விவரம் வருமாறு:- கோவை நியூ சித்தாபுதூர், அன்னபூர்ணா லேஅவுட்டை சேர்ந்தவர் மனோகரன் .இவரது மகன் விஷ்ணுராம் ( வயது 19) இவர் நேற்று காந்திபுரம் 9-வது வீதியை சேர்ந்த பிரதாப் (வயது 24) என்பவருடன் பைக்கில் வி. கே. ...
கோவை: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, வள்ளுவர் நகரை சேர்ந்தவர் மாரி துரை. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார் . இவரது மகன்கள் அகிலேஷ் குமார் (வயது 10) அபினேஷ் குமார் (வயது 8) இருவரும் கோவில்பட்டியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 5 – ம் வகுப்பு 3-ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் ...
கோவை : திண்டுக்கல் மாவட்டம் நத்தம், சிறு குடியைச் சேர்ந்தவர் மகாராஜன் ( வயது 40) இவர் மாங்காய், புளி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரை கடந்த மார்ச் மாதம் கோவையை சேர்ந்த கோபி கருப்பசாமி ( வயது 32) விருதுநகரை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 42) ஆகியோர் செல்போனில் தொடர்பு கொண்டு கோவை ...
கோவை அருகே உள்ள நரசிபுரத்திலிருந்து டவுன்ஹால் வரை செல்லும் அரசு டவுன் பஸ் (எண் 58) தொண்டாமுத்தூர் சந்தைப்பேட்டை மாரியம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. அப்போது குடிபோதையில் வாலிபர் ஒருவர் திடீரென்று சாலையை கடக்க முயன்றார் .இதனால் பஸ் டிரைவர் திடீர் பிரேக் போட்டு பஸ்சை நிறுத்தினார். ...