கோவை : கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், மன்னார்காடு அடர்ந்த வனப்பகுதியில் சிறுவாணி அணைய உள்ளது. 50அடி உயரம் கொண்ட இந்த அணையின் ஒரு பகுதியில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு அங்கிருந்து குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த அணையில் இருந்து தினமும் 10 கோடி லிட்டர் (100 எம். எல். . டி) தண்ணீர் எடுக்கலாம் ...
கோவை ரேஸ்கோர்ஸ் அருகே உள்ளது கே.ஜி திரையரங்கம். கோவையில் பிரபலமான இந்த திரையரங்கில் ஆவேசம் என்ற திரைப்படம் வெளியிடப்பட்டது. நேற்று மாலை திரையரங்கில் படம் போட்ட பின்பு ஏ.சி வேலை செய்யாமல் இருந்ததாக ரசிகர்கள் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் திரையரங்கு நிர்வாகத்தில் புகார் அளித்தனர். ஆனால் நிர்வத்தினரிடம் இருந்து முறையாக ...
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடை பெற்றது. இன்று காலை முதல் மக்கள் ஆர்வமாக வாக்களித்த நிலையில், மாலை 7 மணி வரை 72.09% வாக்குகள் பதிவாகி உள்ளது. இன்று தேர்தலில் பல சுவாரசிய சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், திருச்சியில் முதல்முறையாக இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் இருக்கும் பெண் ...
கோவை நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 52). இந்நிலையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கோவை மக்களவைத் தொகுதி, நல்லாம்பாளையம் மாநகராட்சி நடுநிலை பள்ளி பூத் எண் 145 ல் வாக்களிக்க சென்ற போது கையில் மை வைக்கும் ஊழியரிடம் வலது கை ஆள்காட்டி விரலை காண்பித்து உள்ளார். அப்போது அங்கு இருந்து அதிகாரிகள் ...
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கருப்பையா தன் சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அடுத்துள்ள குழந்திரான்பட்டு அரசு உயர்நிலைபள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து, வேட்பாளர் கருப்பையா திருச்சியில் உள்ள புனித சிலுவை கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவை பார்வையிட்டார். அப்போது, ...
17-வது மக்களவையின் பதவிக்காலம் 2024-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய மக்களவையை அமைப்பதற்கு தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. அரசியலமைப்பு சட்ட விதிகளைக் கருத்தில் கொண்டு, 18-வது மக்களவைக்கான தேர்தல்களை சுதந்திரமான முறையில் நடத்த விரிவான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்துள்ளது. மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவை ஒட்டி ஏப்ரல் 19ம் தேதி ...
ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளைப் பார்க்க பாரீஸ் நாட்டவர் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். உலகத்தையே விளையாட்டுத் திருவிழாவால் ஒருங்கிணைக்க முடியும் என்றால், அது ஒலிம்பிக் போட்டியால் மட்டுமே முடியும். ஒலிம்பிக் ஜோதி வழங்கப்படி, ஒலிம்பிக் போட்டியை உலகுக்கு அளித்த கிரீஸில் நேற்று ஏற்றப்பட்டது. 100 நாள் கவுண்டவுனும் தொடங்கியது. புதன்கிழமை ...
புதுடெல்லி: மக்களவை தேர்தலில் முதல் கட்டமாக, 102 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ளது. முதல்கட்ட தேர்தலில் 8 ஒன்றிய அமைச்சர்கள், 2 முன்னாள் முதல்வர்கள், முன்னாள் ஆளுநர் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடத்தப்பட உள்ளது. இதில் முதல்கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு ...
சென்னை: நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிரான புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 6-ந்தேதி இரவு தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் பறக்கும் படையினரால் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டல் மேனேஜர் சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 3 ...
கோவை மேற்கு மண்டலத்தில் உள்ள கோவை ,நீலகிரி. திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கு மண்டல எல்லைக்குள் 9 நாடாளுமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளது. இந்த ஓட்டு சாவடிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது .மேற்கு ...