கோவை காந்திபுரம்,100 அடி ரோடு, டாக்டர் ராஜேந்திர பிரசாத் ரோட்டில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வேல்முருகன் என்பவர் 47.50 கிராம் எடை கொண்ட நகைகளை அடகு வைத்து ரூ2 லட்சத்து 29 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். இந்த நகைகளை ஆய்வு செய்தபோது அது தங்க முலாம் பூசப்பட்டபோலி நகைகள் என்பது தெரிய வந்தது. ...
கோவை அவிநாசி ரோட்டில் ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு ஏராளமான மாணவ – மாணவிகள் படித்து வருகிறார்கள் . இந்த பள்ளிக்கூடத்துக்கு ஏற்கனவே 2 தடவை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. உடனே வெடிகுண்டு கண்டுபிடிப்புநிபுணர்கள், துப்பறியும் நாயுடன் சென்று சோதனை நடத்தினார்கள் அது வெறும் புரளி என்பது தெரிய ...
கோவை சாய்பாபாகாலனி காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் பாலமுருகன் (வயது 40), இவர்சாய்பாபா காலனியில் உள்ள ஒரு பேக்கரிக்கு டீ குடிக்க சென்றார் .அப்போது அங்கு டீ குடித்துக் கொண்டிருந்த பெண்களை தனது செல்போனில் புகைப்படம் எடுத்தாராம். இது குறித்து கேட்டபோது ஆத்திரமடைந்த பாலமுருகன் அங்கிருந்தவர்களை தள்ளிவிட்டு தப்பி ஓட முயன்றார். உடனே ...
கோவை ஆர். எஸ். புரம், கிழக்கு சம்பந்தம் ரோட்டை சேர்ந்தவர் குமார் ( வயது 43 )இவர் அங்குள்ள செல்வராஜ் என்பவரின் வீட்டின் மாடியில் தங்கி பூ மார்க்கெட் பகுதியில் மளிகை கடை மற்றும் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று காலை குமார் வீட்டை பூட்டிவிட்டு ...
சென்னை: குழந்தை பிறக்கும் போது அறுவை சிகிச்சை அறையில் மனைவியின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை யூடியூபர் இர்பான் வெளியிட்ட நிலையில், தமிழ்நாடு மருத்துவச் சட்டத்தின்படி தவறு என மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இர்பான் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமாக இருக்கும் போது, துபாயில் ஸ்கேன் எடுத்து பார்த்தார். இர்ஃபான், தனக்கு பெண் ...
சீக்கிய படுகொலையின் 40 வது ஆண்டு நினைவு நாளில், ஏர் இந்தியா விமானம் தாக்கப்படலாம் என காலிஸ்தானி தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னு எச்சரித்துள்ளார். நவம்பர் 1 முதல் 19 வரை ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க வேண்டாம் என்று காலிஸ்தானி தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் விமான பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியா டுடே ...
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 14,086 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் இன்று காலை முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பிறகு, சென்னை தலைமைச் செயலகத்தில், செய்தியாளர்களை சந்தித்த போது, சிறப்புப் ...
திருநெல்வேலி மாவட்டம், அம்பை-ஆலங்குளம் சாலையில் உள்ள வடக்கு ரதவீதியில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் 53-வது ஆண்டு விழா பொதுக்கூட்டத்தில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது, அதிமுக 2ஆக பிரிந்துவிட்டது என கூறி கொண்டு இருக்கிறார்கள் என்றும், அதிமுக ஒன்றாகதான் இருப்பதாக கூறிய அவர், வேண்டுமென்றே திட்டமிட்டு ...
குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களை மட்டுமே சூட்டுங்கள் என இந்து அறநிலையத்துறை சார்பில் 31 ஜோடிகளுக்கு திருமண செய்துவைத்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். சென்னை திருவான்மியூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 ஜோடிகளுக்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார். இன்று திருமணம் நடந்த 31 ஜோடிகளுக்கும் தலா ரூ.60,000 மதிப்பிலான பொருட்கள் ...
சென்னை: தமிழ்நாட்டில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் உள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்துள்ளது. இதில் உடுமலை மாவட்டத்தில் அதிகஅளவில் 10 செ.மீ-க்கு மேல் மழை பதிவாகியுள்ளது. அமராவதி அணை தனது முழு கொள்ளளவை நெறுங்கி ...













