தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ஆம் தேதியில் கொண்டாடப்படவுள்ள நிலையில் மதுபிரியர்களுக்கு ஷாஎ கொடுக்கும் வகையில் அக்டோபர் 28 முதல் 30 வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படவுள்ளது. தமிழகத்தில் பல்வேறு நிதி தொடர்பான திட்டங்கள் செயல்படுத்துவதற்கு முக்கிய நிதி ஆதாரமாக இருப்பது டாஸ்மாக் மற்றும் பத்திர பதிவு துறை இந்த இரண்டு துறைகளின் மூலம் மட்டுமே நாளொன்றுக்கு ...

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை… பெண்கள் தங்கும் விடுதி உரிமையாளர் நள்ளிரவில் கைது… கோவை பீளமேடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான மகளிர் தங்கும் விடுதி உள்ளது. இதில் ஏராளமான வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகள் தங்கி உள்ளனர். இந்த விடுதியை ராஜ்குமார் என்பவர் நடத்தி வருகிறார். நேற்றைய தினம் இவர் விடுதியில் தங்கி படிக்கும் ...

சென்னையில் காவல் துறையினரை ஆபாசமாகப் பேசி மிரட்டல் விடுத்த ஜோடிக்கு, 15 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மெரினா கடற்கரையின் லூப் சாலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் காருடன் நின்றிருந்த சந்திரமோகன், அவரது தோழி தனலட்சுமி ஆகியோரை அங்கிருந்து புறப்பட கூறியுள்ளனர் காவல்துறையினர். அப்போது அவர்கள் இருவரும் இணைந்து, பணியிலிருந்த காவலர்களை ...

கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட அம்மன்குளம் பகுதியில் அரசு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு அடுக்குமாடி கட்டிடத்தின் மாடியில் செடிகள் புற்கள் முளைத்து இருப்பதால் மழை நீர் தேங்கி கட்டிடம் முழுவதும் ஓதமாகி உள்ளது. வீடுகளுக்கு உட்புறத்திலும் ஓதமாகி வருகிறது. மேலும் சுவர்களின் பல்வேறு இடங்களில் பாசிகள் படிந்து சுவர்களில் மின்சாரம் (எர்த்) பாய்ந்து வருகிறது. ...

கோவை உக்கடம் -பாலக்காடு மெயின் ரோட்டில் உள்ள ஒரு கேஸ் பங்கில் கேஸ் நிரப்புவதற்கு இன்று மதியம் ஆம்னி கார் ஒன்று வந்தது. கேஸ் நிரம்பி கசிவு ஏற்பட்டதால் திடீரென்று அந்த காரில் தீ பிடித்தது. இதை அறிந்த டிரைவர் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார் .இதனால் அவர் உயிர் தப்பினார்.இந்த தீ விபத்தில் கார் ...

யூடியூபர் இர்ஃபானின் செயல் மன்னிக்கக் கூடியது அல்ல’ என்று பேசியுள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். குழந்தை பிறந்தபோது, பிரசவ அறைக்குச் சென்று குழந்தையின் தொப்புள்கொடியை வெட்டியிருக்கும் இர்ஃபான், அதனை வீடியோவாகவும் எடுத்து அவரது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். முன்னதாக குழந்தையின் பாலினத்தை துபாய் சென்று அறிந்துகொண்ட இர்ஃபான், எந்தக் குழந்தை எனத் தெரிவிக்கும் வீடியோவை யூடியூபில் வெளியிட்டது ...

மதுரை: அனைத்து வழக்குகளுக்கும் சேர்த்து சென்னை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி சவுக்கு சங்கர் கையெழுத்திட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த யூடியூபரான சவுக்கு சங்கர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘பெண் காவலர்களுக்கு எதிராக பேசியதாக என் மீது கோவை, சென்னை, திருச்சி, மதுரை ...

தர்மபுரி மாவட்டத்தைசேர்ந்தவர் முருகேசன் (வயது 46) இவர் பீளமேட்டில் உள்ள தனியார் மில்லில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர் -நேற்று இவர் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும்போது குடிபோதையில் மில் அருகே உள்ள சாக்கடை வாய்க்காலில் தவறி விழுந்து இறந்தார். இதுகுறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து ...

கோவை ஆர். எஸ் புரம். புரூக் பாண்ட் ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில். ஷோரூமில் இருந்த 3 பேண்ட்கள், ஒரு கைப்பை திருடுப் போனது. இது தொடர்பாக அந்த கடையின் மேனேஜர் ஆகாஷ் ஆர் .எஸ் . புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராமநாதபுரம் சண்முக தேவர் வீதியை ...

கோவை பீளமேடு கிரி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் தனது நண்பருடன் பீளமேடு, ஸ்ரீ ராம்நகர் எப்.சி ஐ. ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீராம் நகரில் மனோஜ் என்பவரது வீட்டில் வளர்த்த நாய் அருண்குமாரை துரத்தி கடித்தது .இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது .இது குறித்து அவரது மனைவி ...