கோவை கணிமவள அதிகாரிகள் அவினாசி ரோட்டில் பீ ளமேடுஅருகே வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ” கிராவல் ” மணல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. லாரியும் -மணலும் பறிமுதல் செய்யப்பட்டது. இதை ஓட்டி வந்த சின்ன தடாகம், அம்பேத்கார் நகரை சேர்ந்த ...

கோவையை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நேற்று தனது ஸ்கூட்டரில் பாலக்காடு மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். குனியமுத்தூர் அருகே சென்ற போது அங்கு சாலை குண்டும் குழியுமாக கிடந்தது. அப்போது அங்குள்ள குழியில் கல்லூரி மாணவியின் ஸ்கூட்டர் ஏறி இறங்கிய போது நிலை தடுமாறி அந்த வழியாக ...

கோவை மாவட்டம் சிறுமுகையை சேர்ந்தவர் லோகநாதன் ( வயது 30) கட்டிடத் தொழிலாளி .இவர் கடந்த 23ஆம் தேதி நண்பர்கள் 3 பேருடன் மது குடிக்க சென்றார். அப்போது மற்றொரு நண்பரை லோகநாதன் தரக்குறைவாக பேசினாராம். .இதனால் ஏற்பட்ட தகராறு அந்த நண்பரை லோகநாதன் தாக்கியுள்ளார். இதனால் அவர்கள் லோகநாதன் மீது ஆத்திரமடைந்தனர். இந்த நிலையில் ...

கோவையைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் பத்திர பதிவுத்துறையில் சேலம் மாவட்டத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.34 லட்சத்து 58 ஆயிரத்து 342 மதிப்புக்கு சொத்து சேர்த்து இருப்பதாக கோபாலகிருஷ்ணன் மீதும், அவரது மனைவி தீனா மீதும் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2008 ஆம் ஆண்டு வழக்கு பதிவு ...

சென்னையில் மூளைச்சாவு அடைந்த 2 பேரின் உடல் உறுப்பு தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. செங்கல்பட்டு வல்லம் பகுதி ஆலப்பாக்கம் காலனியைச் சேர்ந்த பி.சதீஷ்குமார்(33) என்பவர் தலைவலி, கையில் உணர்வின்மை மற்றும் நினைவின்மை காரணமாக போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பக்கவாத அறிகுறிகள் இருந்ததைக் கண்டறிந்த மருத்துவர்கள், தீவிர சிகிச்சை அளித்து ...

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனது 100-வது செயற்கைக்கோளான என்விஎஸ்-02-வை இன்று விண்ணில் ஏவுகிறது. இந்த மைல்கல் பணி ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் நடைபெற்றது. இத்தளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி எப்-15 ராக்கெட் மூலம் என்விஎஸ்-02 செயற்கைகோள் விண்ணில் பாய்கிறது. இந்த செயற்கை கோளில் ...

பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் பலியானதும், பலர் காயமடைந்துள்ள செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளாவில் செவ்வாய்க்கிழமை வரை 16 நாள்களில் 15 கோடிக்கும் அதிகமான ...

திண்டுக்கல்: தைப்பூசத்தை முன்னிட்டு பழனிக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், மலைக்கோவிலுக்கு பக்தர்கள் செல்லும் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (30.01.2025) ஒரு நாள் மட்டும் பக்தர்கள் பயன்பாட்டுக்கு இயங்காது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி ...

பிரக்யாராஜ்: மவுனி அமாவாசையையொட்டி, உ.பி: பிரயாக்ராஜ் மஹாகும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மருத்துவர் ஒருவர் 15 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் மாறுபட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை பெற்றுச்சென்றதாகவும் சிலர் மருத்துவமனை யில் ...

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டு போட்டி நேற்று தொடங்கியது. வரும் பிப்ரவரி 14-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டில் 32 பிரிவுகளில் போட்டிகளில் நடைபெறுகின்றன. இதில் தமிழகத்தில் இருந்து 391 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். டேராடூனில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற கண்கவர் தொடக்க ...