தமிழ்நாடு காவல்துறையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த 81 பேர் பதவி உயர்வு பெற்று உதவி கமிஷனர்களாகவும், போலீஸ் துணை சூப்பிரண்டுகளாகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர் .இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்துள்ளது. அதன்படி கோவை சிறப்பு நுண்ணறிவு பிரிவு (எஸ்.ஐ சி )இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த கனகசபாபதி பதவி உயர்வு பெற்று போத்தனூர் சரகஉதவி போலீஸ் ...

சென்னை; இந்திய அளவில் தமிழ்நாட்டில் தனிநபர் வருவாய் 171 சதவீதம் உயர்ந்து இருப்பதாக தமிழக அரசு தரிவித்துஉள்ளது. மேலும் தமிழ்நாடு இந்திய அளவில் 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக வளர்ச்சி பெற்றிருக்கிறது என குறிப்பிட்டுள்ளது. தமிழகத்தில் தனிநபர் வருவாய் 171 சதவீதம் உயர்ந்துள்ளதாக பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது என்பதை சுட்டிக்காட்டி, ...

வேங்கைவயல் விவகாரத்தில் நீதிமன்றம் மூலம் அரசியல் செய்வதை அனுமதிக்க இயலாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் தொடர் விசாரணை நடத்தி ...

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணையை நடத்த வேண்டும் எனவும், காவல்துறை எல்லை மீறினால் உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் இரவு நேரத்தில் நுழைந்த ஒருவர், அங்கிருந்த நபரை தாக்கி, அவருடன் பேசிக் கொண்டிருந்த மாணவி ஒருவரை ...

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனுக்கு அருகே அமைந்துள்ள ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்திற்கு அருகே நடுவானில் இரண்டு விமானங்கள் மோதிக்கொண்டன. 60 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்களுடன் சென்ற அந்த விமானம் பிளாக் ஹாக் ஹெலிகாப்டருடன் மோதியது. பிஎஸ்ஏ ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் தரையிறங்க முயன்ற போது நடுவானில் ராணுவ ஹெலிகாப்டரில் மோதியதாகத் தகவல்கள் ...

மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின்கீழ் செயல்படும் தேசிய மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டு நிறுவனம் சென்னை கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காட்டில் உள்ளது. இங்கு காது கேளாதோர் – பார்வையற்றோரின் 3-வது தேசிய மாநாடு நாளை (ஜன.31) நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முதன்மை விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கலந்து ...

கோவை சவுரிபாளையம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சதீஷ் (வயது 40) சாப்ட்வேர் இன்ஜினியர் .இவர் தனது வீட்டின் முன் காரை நிறுத்திவிட்டு கடந்த 26- ஆம் தேதி வெளியூர் சென்று விட்டார்.நேற்று முன்தினம் இரவில் அவரது காரில் திடீரென்று தீ பிடித்து எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை ...

கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார்,சப் இன்ஸ்பெக்டர் ஜெசிஸ் உதயராஜ் ,சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் ஆகியோர் நேற்று மாலை சிங்காநல்லூர் – வெள்ளலூர் ரோட்டில் ரோந்து சுற்றிவந்தார். அப்போது அங்குள்ள ஒரு பாலத்துக்கு அடியில் நின்று சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அதை ...

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம், மைல்கல் ராஜேஸ்வரி கோவில் வீதியை சேர்ந்தவர் அறிவழகன் ( வயது 38) கட்டுமான தொழில் செய்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். மன அழுத்தத்தின் காரணமாக கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்தார். இந்த நிலையில் அவர் தனது மோட்டார் சைக்கிளில் சிங்காநல்லூருக்கு சென்றார். அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனை முன் ...

கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என தனித்தனியாக உள்ளனர்..கோவை சிறையில் கைதிகளின் இறப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாதந்தோறும் 4 கைதிகள் மரணம் அடைகிறார்கள். இந்த நிலையில் நேற்று ஒரு கைதி திடீர் மரணம் அடைந்தார். அவரது பெயர் அலெக்ஸ் (வயது ...