கோவை கவுண்டம்பாளையம் மெய்காந்தர் வீதியை சேர்ந்தவர் சேகர் (45). ஆட்டோ டிரைவர். அவரது மகன் மணிபாரதி (19). இந்த நிலையில் நேற்று கவுண்டம்பாளையம் போலீசார் அன்னை இந்திரா காந்தி நகர் அருகே உள்ள காலி மைதானம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த மணிபாரதி மற்றும் ஜானகிராமன் (27) ஆகியோரை ...

கோவை கடைவீதி, சாய்பாபா காலனி, கவுண்டம்பாளையம், செல்வபுரம் பகுதியில் நேற்று தீவிர கஞ்சா வேட்டை நடந்தது. அப்போது உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள மீன் மார்க்கெட் அருகே கஞ்சா விற்றதாக தெற்கு உக்கடம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த முகமத் அப்துல்லா (வயது 38) கைது செய்யப்பட்டார். சாய்பாபா காலனி ஜீவா நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் ...

கோவை ரத்தினபுரி, கணபதி வெங்கடாசலம் ரோட்டை சேர்ந்தவர் பூபதி .இவரது மகள் அஸ்வினி. (வயது 26) இவருக்கு வாட்ஸ் அப்பில் ஒரு அழைப்பு வந்தது. அதில் “கோல்டு மேன் சச் ஸ்டாக் “என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தால் பல கோடி சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது . இதை நம்பி அஸ்வினி பல்வேறு தவணைகளில் வங்கி கணக்கு ...

கோவை தெற்கு உக்கடம் அல்- அமீன் காலனியை சேர்ந்தவர் அப்துல் ஹக்கீம். இவரது மகன் அஜ்மல் .இவர் பெரிய கடை வீதி உப்பு கிணறு சந்தில் நகைக்கடை நடத்தி வருகிறார் .நேற்று மாலையில் இவரது கடைக்கு ஒருவர் நகை வாங்குவது போல் சென்றார்.சில நகைகளை பார்த்தார். சிறிது நேரம் கழித்து தனக்கு எந்த நகையையும் பிடிக்கவில்லை ...

கோவை காந்தி பார்க் தடாகம் ரோட்டை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 21) மருந்து குடோனில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை புதூர் அண்ணா நகரை சேர்ந்த ரவீந்திரன் என்பவரை குடிபோதையில் தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மகன் அருண் என்ற ஜோக்கர் (வயது 28 )தனது நண்பரான ...

கோவையில் தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுகள் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்த எல்.பி.எஃப். சங்கத்தின் மாநில செயலாளர் வழக்கறிஞர் வி.பி.வினோத்குமார்மத்திய அரசால் வரைவு அரசாணையாக வெளியிடப்பட்டுள்ள பல் உயிர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல், உணர் திறன் மண்டலத்தால் வால்பாறை பகுதிக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் வால்பாறை பகுதி ...

கோவை உக்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி, சப் இன்ஸ்பெக்டர் அஜய் சர்மா ஆகியோர் நேற்று கோட்டைமேடு வின்சென்ட் ரோடு பகுதியில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு ஸ்கூட்டரில் வந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 90 போதை மாத்திரைகளும், 8 சிரஞ்சியும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ...

கோவை கவுண்டம்பாளையம், சேரன் நகர், 4-வது வீதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் .இவரது மனைவி விஜயா ( வயது 59) இவர் கடந்த 26 ஆம் தேதி அவரது வீட்டில் விளக்கு பற்ற வைத்தார். அப்போது திடீரென்று இவரது சேலையில் தீப்பிடித்து உடல் முழுவதும் கருகியது.. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை அளித்தும் ...

கோவை ராமநாதபுரம், திருவள்ளூர் நகர் ஐயப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 76) இவர் பி.எஸ். என்.எல் நிறுவனத்தில் மாவட்ட இன்ஜினியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது செல்போன் வாட்ஸ் அப் அழைப்பில் ஒருவர் பேசினார். அவர் தன்னை சிபிஐ அதிகாரி என்றும் பழனிச்சாமி வங்கி கணக்கில் ...

கோவை போத்தனூர் சாரதா மில் ரோட்டை சேர்ந்தவர் விக்ரமன் ( வயது 65 )பழைய இரும்பு வியாபாரி. இவரது மனைவி சுசிலா (வயது 60) இவர்களுக்கு ஒரு மகன் ,ஒரு மகள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகிவிட்டது . விக்ரமனுக்கு குடிப்பழக்கம் இருந்தது .இதனால் கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த ...