கோவை ஆர்.எஸ். புரத்தில் கடந்த 14ஆம் தேதி குண்டு வெடிப்பு தினத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பாஜக ஆர். எஸ். எஸ் உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் நடந்தது. இந்த கூட்டத்தில் மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பேசியதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் மீதுஆர். எஸ். புரம் ...
கோவை சூலூர் பகுதியில் தங்கியிருந்து தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவருடன் இன்ஸ்டாகிராமில் ஒரு பெண் பழகினார். பின்னர் அவரை ஆசை வார்த்தை காட்டி குறிப்பிட்ட இடத்துக்கு வருமாறு அந்த பெண் அழைத்துள்ளார். இதை நம்பி அந்த மாணவரும் அங்கு சென்றார் .அப்போது அந்தப் பெண் உட்பட 4 பேர் அங்கு நின்று கொண்டிருந்தனர். அவர்கள் ...
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ஒரு குடோனில் எரிசாரயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின் பேரில் கோவை மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் சூலூர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் நேற்றுஅதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது பாப்பம்பட்டியில் உள்ள ஸ்ரீ ...
கோவை வடவள்ளி அடுத்த கோல்டன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (54). இவர் ரேஸ்கோர்ஸ் பகுதியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான பள்ளியில் ஓவியம் மற்றும் யோகா ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அடிக்கடி யோகா மற்றும் ஓவிய பயிற்சிக்கு வரும் மாணவிகளிடம் பாலியல் தொல்லை செய்ததாக கூறப்படுகிறது .இந்நிலையில் நேற்று 2 மாணவிகளிடம் ...
சென்னை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடங்கி உள்ள வர்த்தக போர் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதியில் வருடத்திற்கு சுமார் $7 பில்லியன் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வருடா வருடம் இந்தியாவிற்கு இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க அதிபரின் வர்த்தக போர் ...
கோவையை அடுத்த ஆலந்துறை பக்கம் உள்ள ஜாகிர் நாயக்கன்பாளையம், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் செல்லப்ப கவுண்டர். இவரது மனைவி குஞ்சம்மாள் ( வயது 76) இவர் தனியாக வசித்து வருகிறார். கடந்த 4-ம்தேதி இவரது வீட்டில் உள்ள பூஜை அறையில் விளக்கு பற்ற வைத்து சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதமாக விளக்கு தீ ...
கோவை சிங்காநல்லூர், ஆரியன் காடு ரோடு பட்டத்தரசி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தமிழரசு. இவரது மனைவி பானுமதி (வயது 65) இவர் நேற்று காலையில் அங்குள்ள ரோட்டில் நடை பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 ஆசாமிகள் அவரது கழுத்தில் கடந்த 4 பவுன் தங்கசெயினை பறித்து விட்டு ...
கோவை உக்கடம் பகுதியில் சேர்ந்தவர் 17 வயது சிறுமி இவர் பிளஸ் 2 படித்து வந்தார். குடும்பச் சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். இதற்கிடையில் அந்த சிறுமியின் தாத்தா உடல் நல குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனால் தனியாக இருந்த பாட்டிக்கு துணையாக சிறுமி இரவு நேரத்தில் அங்கு தங்கி வந்தார். கடந்த 15ஆம் ...
கோவை : சென்னையில் வக்கீல்கள் கடந்த 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19- ஆம் தேதி போலீசாரால் தாக்கப்பட்டனர். அந்த சம்பவத்தை ஆண்டுதோறும் கறுப்பு தினமாக வக்கீல்கள் கடைபிடித்து வருகிறார்கள். தமிழ்நாடு – புதுச்சேரி வக்கீல்கள் கூட்டுக்குழு முடிவின்படி இன்று ( புதன்கிழமை) கோவையில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினார்கள். வக்கீல்கள் பாதுகாப்பு ...
கோவை மாவட்டத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:- சேலம் மாநகர காத்திருப்போர் பட்டியலில் இருந்த ரமாதேவி கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராகவும், கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளனர். மேலும் பேரூர் அனைத்து ...













