கோவை சுந்தராபுரம் அண்ணா டீச்சர்ஸ் காரணியை சேர்ந்தவர் சிவகாமி சுந்தர்ராஜ் ( வயது 52) சம்பவத்தன்று இவரது வீட்டுக்கு ஒரு ஆணும், பெண்ணும் வந்தனர். அவர்கள் தங்களை ஜோதிடர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர்.சிவகாமிக்கு தோஷம் இருப்பதாகவும், பூஜை வைத்து அதை நீக்கிவிடலாம் என்று கூறினார்கள் . இதை நம்பிய சிவகாமி 4 கிராம் மோதிரம் , ...
திருப்பூர் மத்திய பகுதி போலீசார் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள ஆண்டிபாளையம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள காட்டுப் பகுதியில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கறுப்பு துணியால் முகத்தை மூடிய நிலையில் கையில் அரிவாள் கத்தி ,இரும்பு கம்பி கட்டைகளுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது ...
கோவை குனியமுத்தூர் இடையர்பாளையத்தை சேர்ந்தவர் காஜா மொய்தீன் ( வயது 45) கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தியதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் இவரை கைது செய்தனர். இவர் மீது ரேஷன் அரிசி கடத்திய தொடர்பாக 5க்கு மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தொடர்ந்து அவர் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்ததால் அவரை ...
கோவை ரத்தினபுரியை சேர்ந்த ராஜ்குமார். இவர் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவர் அந்த பகுதியில் புதிதாக வீடுகள் கட்டினார். இந்த வீடுகளுக்கு 6 புதிய மின் இணைப்பு கேட்டு முறைப்படி விண்ணப்பித்து கட்டணம் செலுத்தி இருந்தார். இது தொடர்பாக ரத்தினபுரி மின்வாரிய அலுவலகத்தில் போர் மேனாக வேலை பார்க்கும் ஹாரூணை சந்தித்து தனது வீடுகளுக்கு மின் ...
கோவை ஆர். எஸ். புரம், டி.வி சாமி ரோட்டை சேர்ந்தவர் ராஜ்குமார் மல்பானி (வயது 62) இவர் ஒப்பணக்கார வீதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். அந்த நிறுவனத்தின் டைரக்டராகவும் இருந்து வந்தார். இவருக்கும் பிரவீன் குமார், விஜய மதி ஆகியோருக்கும் தொழில் ரீதியாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. ...
கோவை மாவட்டம் காரமடை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் துறைக்கு தகவல் வந்தது. போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் காரமடை மற்றும் தனிப்படை போலீசார் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்று கொண்டிருந்ததாக மேட்டுப்பாளையம் வெள்ளியங்காட்டைச் சேர்ந்த மணி என்பவரின் மகன்கள் தமிழ்ச்செல்வன் ...
கடந்த 2024ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் புதிய ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்காவின் ஆக்ஷமுந்தைய ஜோ பைடன் அரசு விரும்பியது. அதனால்தான் இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்க அரசு நிதியுதவி வழங்கியதாக கருதியதாகவும், இந்தியாவில் ஆட்சி ...
கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் நேற்று ரயில் நிலையம் ரோட்டில் உள்ள ஒரு தியேட்டர் அருகே சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 39 கிராம் கஞ்சா கிரீம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . இதையடுத்து இவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் இவர் கேரள மாநிலம் கண்ணூர் ...
தென்காசி மாவட்டம் கழுகுமலை பக்கம் உள்ள சம்பா குளத்தைச் சேர்ந்தவர் தவசி பாண்டியன். இவரது மகன் குருசாமி (வயது 27) கோவையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். இதற்காக கோவை டாடாபாத் எஸ்.என்.டி லேஅவுட் ஒரு மென்ஷனில் அறை எடுத்து தங்கி உள்ளார். இவர் நேற்று தங்கி இருந்த அறையில் பாத்ரூம் ஜன்னலில் ...
கோவை கவுண்டம்பாளையம், மவுரியா ரெசிடென்சி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் பாபு. இவரது மனைவி சாவித்திரி ( வயது 60) இவர் நேற்று சிவானந்த காலணியில் இருந்து மேட்டுப்பாளையம் ரோட்டுக்கு வருவதற்கு அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்தார். மேட்டுப்பாளையம் ரோடு பஸ் நிலையத்தில் இறங்கும் போது அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் செயினை காணவில்லை. ...













