நல்ல செய்தியாக விரைவில் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ். இன்றிரவு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ-10 கிளம்புகிறது. இந்திய நேரப்படி நாளை அதிகாலை கிளம்புகிறது. விண்வெளியில் தங்கி ஆய்வு செய்ய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையான சுனிதாவில்லியம்ஸும், புட்ச் வில்மோரும் கடந்த ஜூன் 5, 2024 ம் தேதி போயிங்கின் ...

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பின் வெள்ளை மாளிகை டெஸ்லா கார்களுக்கான காட்சியகமாக மாறியது. டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், திடீரென ஐந்து கார்களுடன் அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வந்தார். டிரம்பும், எலான் மஸ்கும் தெற்கு புல்வெளியில் ஐந்து கார்களுடன் போஸ் கொடுத்தனர். அப்போது டிரம்ப், தனக்கு பிடித்த சிவப்பு நிற காரை ...

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது: டெல்லியில் தமிழ்நாட்டை அடகு வைத்தது யார் ஸ்டாலின் அவர்கள்? கல்லக்குடியில் ரயில் வராத தண்டவாளமாகப் பார்த்து தலை வைத்ததில் தொடங்கிய நாடக வரலாறு , இன்று வரை துரோக சரித்திரமாக நீண்டுகொண்டு இருக்கிறது. கட்சி தோற்றுவிக்கப்பட்டதன் அடிப்படை நோக்கத்தையே மறந்துவிட்டு இந்தி திணிப்பை முதன்முதலில் கொண்டு வந்த ...

கடந்த சில ஆண்டுகளாகவே அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளை சேர்க்க பெற்றோர் முன் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டு, 12 நாட்களில் 42 ஆயிரம் மாணவ, மாணவிகள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக பள்ளி கல்வித்துறையின் கீழ் 37,00க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் சுமார் 52 லட்சம் மாணவ, ...

சென்னை: இன்று தங்கம்விலை சவரனுக்கு ரூ. 65000 ஐ எட்டி புதிய சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டின் துவக்கத்தில் தங்கம் விலை சவரன் 64 ஆயிரத்தை கடந்து உச்சத்தை எட்டியது. பிறகு தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,520-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ...

திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரில் திமுக சார்பில், ‘தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்’ என்ற தலைப்பில் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிரான கண்டனப் பொதுக்கூட்டம் இன்று (12.03.2025) மாலை நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அதில், “நாடு இப்போது என்ன நிலைமையில் இருக்கிறது பிரதமரே… ஜி.டி.பி. எனப்படும் இந்திய ...

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ‘தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு இண்டேன், பாரத் கேஸ், ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் ஆகியவற்றின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கான இலவச தொலைபேசி அழைப்பில் (1800 2333 555) தொடர்பு கொண்டு பேசும் போதெல்லாம் இந்தியில் மட்டுமே பதிலளிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. இதுவும் ஒரு ...

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை (மார்ச் 14), பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். அதற்கு அடுத்த நாள் சனிக்கிழமை, தமிழக அரசின் வேளாண் நிதி நிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிலையில், இதுவரை இல்லாத திட்டமாக தமிழக பொதுபட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் ...

கோவை சிங்காநல்லூர் நீலிக் கோணாம் பாளையம், ராமசாமி லே-அவுட்டை சேர்ந்தவர் கருப்பையா ( வயது 42 )பிரபல கஞ்சா வியாபாரி இவர்சோமனூர் ஆத்துப்பாலம் பகுதியில் கஞ்சா விற்றதாக இவரை கருமத்தம்பட்டி போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து 8 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர் தொடர்ந்து கஞ்சா வியாபாரம் செய்து வந்ததால் இவரை ...

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சாந்தி. இவர் கடந்த 2000-ம்ஆண்டு திண்டுக்கல் மாவட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிகள் சேர்ந்தார். பின்னர் பதவி உயர்வு பெற்று கடந்த 2018-ம்ஆண்டில் சார் பதிவாளராக பதவி  உயர்வு பெற்றார். இதனால் அவர் தஞ்சாவூர், சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், உள்ளிட்ட பல பகுதிகளில் சார்பாக பணியாற்றினார். தற்போது ...