சேலம் மாவட்டம் ஆத்தூர் பக்கம் உள்ள கருமதுரை, புதுவளவு பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி இவரது மகன் ஸ்ரீதரன் ( வயது 20) இவர் நேற்று பீளமேடு ஹோப் காலேஜ் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் அப்போது அந்த வழியாக சங்ககிரியில் இருந்து கோவைக்கு வந்த அரசு பஸ் அவரது பைக் மீது மோதியது. இதில் ஸ்ரீதரன் ...

கோவை உக்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை,சப் இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் ஆகியோர்ர் உக்கடம் இஸ்மாயில் வீதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே நேற்று மாலை ரோந்து சுற்றி வந்தனர் . அப்போது அங்குள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ( குட்கா ) விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆர். எஸ். புரம், ...

கோவை சுந்தராபுரம் பொள்ளாச்சி ரோடு சிக்னல் அருகே உள்ள வணிக வளாகத்தில் பியூட்டி பார்லர் செயல்பட்டு வந்தது.இங்கு மசாஜ் என்ற பெயரில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக சுந்தராபுரம் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது ...

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில், திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி செயல்வீரர்கள் மற்றும் செயல்வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் காந்திமார்க்கெட் ஸ்ரீ மீனாட்சி மகாலில் நடைபெற்றது. நிகழ்விற்கு முன்னதாக டிடிவி தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் திமுக ஆட்சி காலத்தில் அறிவியல் பூர்வமான ஊழல்கள் நடைபெறுவது ...

தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் வேளாண்மை உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சனிக்கிழமை(மார்ச்.15) தாக்கல் செய்து வருகிறார். தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (மாா்ச் 14) தாக்கல் செய்து உரையாற்றினார். நிதிநிலை அறிக்கையில் பல்வேறு ...

இசைஞானி இளையராஜாவின் அரை நூற்றாண்டு காலத் திரையிசைப் பயணத்தை கொண்டாட அரசு முடிவெடுத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இசைஞானி என ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜா சில மாதங்களுக்கு முன்பு சிம்பொனி இசையை 35 நாட்களில் எழுதி முடித்ததாகக் கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். தான் இசையமைத்த ‘வேலியண்ட்’ என பெயரிடப்பட்ட சிம்பொனி இசையை லண்டனில் மார்ச் ...

ஐரோப்பாவிலிருந்து வரும் மதுபானங்களுக்கு 200% வரி விதிக்கப்போவதாக டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்காவிலிருந்து வரும் மதுபானங்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருந்தது. இதற்குப் பதிலடியாகவே டிரம்ப் இந்த மிரட்டலை விடுத்துள்ளார். முன்னதாக, ஐரோப்பிய ஒன்றியம் 50% வரி விதிக்கப்போவதாக அறிவித்திருந்தது. டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் இதைப் பற்றி ...

சென்னை: ஏசி பேருந்துகளிலும் விருப்பம்போல பயணிக்க ரூ.2,000 பயண அட்டையை மாநகர போக்குவரத்து கழகம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாநகர போக்குவரத்து கழகத்தின்கீழ் 50 குளிர்சாதன (ஏசி) பேருந்துகள் உட்பட 3.056 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், ஏசி தவிர்த்து மற்ற பேருந்துகளில் பயணிக்க ரூ.320 ...

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. 2025-2026-ம் ஆண்டுடிற்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார். இந்நிலையில் அதிமுக அமளியில் ஈடுப்பட்டு வெளிநடப்பு செய்திருக்கிறது. செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அன்றைக்கு எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் சட்டசபைத் தலைவராக இருந்த தனபாலை பதவி ...

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளப் பதிவில், “தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பான முன்னோட்டத்தில் ரூபாய் என்பதன் அடையாளமான ₹ என்ற குறியீட்டை நீக்கி விட்டு, அதற்கு பதிலாக ரூ என்ற குறியீட்டை வைத்து, அதை ஏதோ புரட்சி போன்று திமுக அரசு விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது. திமுக அரசின் செயலற்ற ...