16 வயது மகளை பாலியல் உறவுக்கு அழைத்த இளைஞர்: இரும்பு கம்பியால் அடித்து கொன்ற தந்தை கைது

 16 வயது மகளை பாலியல் உறவுக்கு அழைத்த இளைஞர்: இரும்பு கம்பியால் அடித்து கொன்ற தந்தை கைது

செங்கல்பட்டு அடுத்த பரனூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் டில்லி. இவர் மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 16வயதில் மகள் உள்ளார். அவர் அருகே உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். டில்லியுடன் இதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் கட்டிட வேலை செய்து வருகிறார்.இருவரும் ஒரே வேலை செய்து வருவதால் நட்பாக பழகி வந்தனர். இந்நிலையில் டில்லியின் 16-வயது மகளை ராஜேஷ் பாலியல் உறவு கொள்ள வருமாறு அழைத்து கையைப்பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த 16-வயது சிறுமி ராஜேஷின் கையை உதறிவிட்டு வீட்டிற்கு சென்று தனது தந்தை டில்லியிடம் நடந்தவற்றை கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த டில்லி அருகே கிடந்த இரும்பு கம்பியை எடுத்துக்கொண்டு ராஜேஷிடம் விசாரணை நடத்த சென்றுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட டில்லி தனது கையில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து ராஜேஷை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் ராஜேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கிருந்து தப்பியோடிய டில்லியை அப்பகுதி பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News Express Tamil

Related post