மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் தேர்வாகிறார் நிர்மலா சீதாராமன்..!!
கோவை பைபாஸ் ரோட்டில் பைக் மீது லாரி மோதி ஒர்க் ஷாப் தொழிலாளி பரிதாப பலி..!

கோவையை அடுத்த வெள்ளலூர் பக்கமுள்ள கஞ்சிகோணாம் பாளையத்தை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவரது மகன் காளிதாஸ் (வயது 26)ஒர்க் ஷாப் தொழிலாளி.இவர் நேற்றுஅங்குள்ள பைபாஸ் ரோட்டி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். பட்டணம் பிரிவில் உள்ள சர்ச் எதிர்புறம் சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரி இவர் மீது மோதியது. இதில் காளிதாஸ் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து அவரது தாயார் கமலம் சூலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் .இன்ஸ்பெக்டர் மாதையன் வழக்குப்பதிவு செய்து சேலம் எடப்பாடியை சேர்ந்த லாரி டிரைவர் தன வேந்தன் என்பவரை கைது செய்தார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.