மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் தேர்வாகிறார் நிர்மலா சீதாராமன்..!!
கோவை கல்லூரி கட்டிடத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பரிதாப பலி..!

கோவை ஜன22.ஈரோடு மாவட்டம் கோபி பக்கமுள்ள கள்ளிப்பட்டி சேர்ந்தவர் பகவதி யண்ணன் (வயது 64) இவர் கோவை துடியலூர் பக்கம் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தொழிலாளியாக (வாட்டர்மேன்) வேலை பார்த்து வந்தார் .இவர் நேற்று கல்லூரியில் உள்ள 15 அடி உயர கட்டிடத்தில் நின்று வேலை செய்து கொண்டிருந்தார் அப்போது திடீரென்று கீழே தவறி விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது . சிகிச்சைக்காக சிங்கநல்லூர்இ-எஸ்.ஐ மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதுகுறித்துஅவரது மனைவி சின்னம்மாள் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகிறார்கள்.