3 வயது குழந்தையை கட்டையால் தாக்கிய பெண் கைது – கோவையில் நடந்த பயங்கர சம்பவம்

 3 வயது குழந்தையை கட்டையால் தாக்கிய பெண் கைது – கோவையில் நடந்த பயங்கர சம்பவம்

சூலூர் அருகே 3 வயது குழந்தை கட்டையால் தாக்கிய பக்கத்து வீட்டுக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பட்டினம் புதூரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 32), இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவருடைய 3 வயது குழந்தை நேற்று அருகிலுள்ள பூங்காவனம் (43), என்பவரது வீட்டு காம்பவுண்டுக்குள் விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த பூங்காவனம் குழந்தையை வெளியே போய் விளையாடுமாறு கூறியதாக தெரிகிறது. ஆனால் அந்த குழந்தையை வெளியே போகாமல் அடம் பிடித்து தொடர்ந்து அங்கேயே விளையாடிக் கொண்டிருந்தது. இதனால் ஆத்திரம் இந்த பூங்காவனம் அருகிலிருந்த கட்டையை எடுத்து குழந்தையை தாக்கியுள்ளார். இதனால் குழந்தை வலி தாங்காமல் கதறி அழுதது. அப்போது குழந்தையின் சத்தத்தைக் கேட்டு தந்தை சுரேஷ்குமார் மட்டும் அருகில் இருந்தவர்கள் குழந்தையிடம் சென்று விசாரித்தனர். அப்போது பக்கத்து வீட்டு பெண் கட்டையால் தாக்கியது தெரியவந்தது. இது குறித்து அவர்களிடம் சென்று முறையிட்டனர். ஆனால் அவர் முறையாக பதிலளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து சம்பவம் குறித்து குழந்தையின் தந்தை சுரேஷ் குமார் சூலூர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி பூங்காவனத்தை கைது செய்தனர். 3 வயது குழந்தையை கட்டையால் தாக்கிய பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

News Express Tamil

Related post

error: Content is protected !!