மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குறித்து பேஸ்புக்கில் ஆபாசமாகப் பதிவு : நீதிமன்றத்தில் சரணடைந்த பேராசிரியர் சிறையிலடைக்க நீதிபதி உத்தரவு

 மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குறித்து பேஸ்புக்கில் ஆபாசமாகப் பதிவு : நீதிமன்றத்தில் சரணடைந்த பேராசிரியர் சிறையிலடைக்க நீதிபதி உத்தரவு

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.கே. கல்லூரியின் வரலாற்று பாடப்பிரிவின் தலைவராகவும் பேராசிரியராகவும் பணியாற்றிவர் ஷாஹார்யார் அலி. இவர் கடந்த மார்ச் மாதம் தனது பேஸ்புக்கில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சரான ஸ்மிருதி இரானி குறித்து ஆபாசமாகப் பதிவிட்டடுள்ளார். இதையடுத்து இவர் மீது பாஜக தரப்பில் ஃபிரோசாபாத் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கைக்கு காவல் துறையினர் தயாராகினர்.

இதனிடையே அவரை கல்லூரி நிர்வாகம் தற்காலிகமாக இடைநீக்கம் செய்தது. கைதாவதிலிருந்து தப்பிக்கும் பொருட்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் முன்ஜாமின் கோரி அலி வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த ஆபாச பதிவை தான் பதிவிடவில்லை என்றும், தன்னுடைய பேஸ்புக் கணக்கை யாரோ ஹேக் செய்து அவ்வாறு பதிவிட்டதாகவும் வாதாடினார். ஆனால் அதற்கு எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி நீதிமன்றம் முன்ஜாமின் வழங்க மறுத்துவிட்டது. பின்னர் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய, அங்கேயும் அலிக்கு முன்ஜாமின் மறுக்கப்பட்டது.

இச்சூழலில் நேற்று பேராசிரியர் அலி ஃபிரோசாபாத் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தார். அங்கு அவர் இடைக்கால ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். ஆனால் நீதிபதி அனுராக் குமார் அவரது ஜாமின் மனுவை நிராகரித்தார். மேலும் பேராசிரியரை சிறையிலடைக்க உத்தரவிட்டார். இதற்குப் பின் அலி சிறையில் அடைக்கப்பட்டார்.

News Express Tamil

Related post