ஷோரூமில் மாடியிலிருந்து கார் கவிழ்ந்து சிறுவன் உட்பட 2 பேர் காயம் : 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

 ஷோரூமில் மாடியிலிருந்து கார் கவிழ்ந்து சிறுவன் உட்பட 2 பேர் காயம் : 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திருமலை: ஐதராபாத் ஷோரூமில் மாடியிலிருந்து கார் கவிழ்ந்து சிறுவன் உட்பட 2 பேர் காயமடைந்தனர். தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் அல்காபுரி டாடா மோட்டார்ஸ் கார் ஷோரூம் உள்ளது. இந்த ஷோரூமின் முதல் தளத்தில் இருந்து வாடிக்கையாளருக்கு கார் வழங்கப்பட்டது. அப்போது, கார் வாங்க வந்த வாடிக்கையாளர் காரை ஸ்டார்ட் செய்தவுடன் அதிவேகமாக இயக்கி உள்ளது. இதனால், முதல் மாடியிலிருந்த கண்ணாடி தடுப்பை உடைத்துக்கொண்டு கீழே தரை தளத்தில் சாலையோரம் நின்றிருந்த மற்றொரு காரின் மீது தலை கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், காரில் இருந்த வாடிக்கையாளர் மற்றும் சிறுவன் காயமடைந்தனர். இதனால், அப்பகுதியில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் ஷோரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.

News Express Tamil

Related post