பெண்ணிடம் ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் பேசி கொலை மிரட்டல்: இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்

 பெண்ணிடம் ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் பேசி கொலை மிரட்டல்: இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்

பெண்ணிடம் ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் பேசி கொலை மிரட்டல் விடுத்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள மண்டையூர் பகுதியில் முருகேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் தனலட்சுமி தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அதே பகுதியில் வசிக்கும் சிவா மற்றும் பாலா என்ற இருவர் அவரை ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் திட்டி தகராறு செய்துள்ளனர்.

இதனையடுத்து பாலா மற்றும் சிவா ஆகிய 2 பேரும் இது பற்றி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தால் உனது கணவரையும், உன்னையும் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டு சென்றுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக பாலா மற்றும் சிவாவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News Express Tamil

Related post

error: Content is protected !!